

இன்றைய காலக்கட்டத்தில் காதலை ப்ரபோஸ் செய்யும் முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு காதலர்களும் தங்கள் காதலை வித்யாசமான முறையில் வெளியிட விரும்புகிறார்கள். அதிலும் காதலியை திருமணம் செய்வதற்கு ஒருவர் முழங்காலில் முட்டியிட்டு பிரபோஸ் செய்வது ஏன்? இப்படி முழங்காலில் முட்டியிட்டு பிரபோஸ் செய்வது பாரம்பரிய முறை என்று கூறுகின்றனர் பல நூற்றாண்டு காலமாக இந்தமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
நிச்சயதார்த்த மோதிரங்கள்
நிச்சயதார்த்த மோதிரங்கள் பயன்படுத்துவது நீண்ட காலமாக பின் பற்றப்பட்டு வருகிறது. திருமணத்தின் போது தங்க மோதிரம் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். இந்தமாதிரி செய்வது பண்டைய ரோமன் கலாசாரத்தில் உள்ளது. ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வது போது வெளியில் நடைபெறுகிறது. பிறகு முழங்காலில் முட்டியிட்டு ப்ரபோஸ் செய்வது இடைக்காலத்தில கொண்டு வரப்பட்டது. வைர மோதிரங்கள் வழங்கும் நிகழ்வுகள் 1470களில் பணக்காரர்கள் இடையே பழக்கமானது. இதனால் வைர மோதிரங்கள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முழங்காலில் முட்டியிட்டு ப்ரபோசல் செய்யும் முறை
இடைக்காலத்தில்தான் இந்த பழக்கம் ஏற்பட்டது. காதலிக்கு முழங்காலில் முட்டியிட்டு காதலை வெளிப்படுத்துவது துணையின் மீதான பக்தியை அது காட்டுகிறது. ஒருபக்கம் மக்களால் இந்த வழக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மறுபக்கம் இது அடிமைத்தனம் ஆன விஷயமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் 19ம் நூற்றாண்டின் திருமண முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
லீப் ஆண்டு ப்ரபோசல்
பாரம்பரிய திருமண முன் மொழிவுகள் உலகெங்கிலும் புகழ் பெற்றது, ஆண் பெண் இருவரும் திருமணமும் மொழிவுகளில் பங்கு பெறவேண்டும். இருவரின் ஒப்புதலும் திருமணத்திற்கு அவசியமாக பார்க்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில் இளவரசி சார்லோட் தனது சொந்தக் கணவரை தேர்ந்தெடுத்தார் என்ற செய்தி உலகெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது லீப் வருட ப்ரபோசல் என்பது மிகவும் பிரபலமானது. பெண்களின் ஒப்புதலும் பார்க்கப்பட்டது.
19ம் நூற்றாண்டின் நாட்டுப்புறவியல் ஆண்கள் தங்கள் சொந்த கட்டுக்கதைகளை பரப்பினர். அதை எலிசபெத் கம்யூன் வாவ் நடைமுறை என்று கூறினர். பிப்ரவரி 29லீப் வருட ப்ரபோசல் பெரிதாக பார்க்கப்பட்டது. 1839 லவ் விக்டோரியா ராணி மற்றும் ஆல்பர்ட்டா நிச்சயதார்த்தத்தில் கூட நிறைய விஷயங்கள் பின்பற்றப்பட்டன. ஆட்சி செய்யும் மன்னராக இருந்ததால் அவர் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டது.
லீப் வருட ப்ரபோசல் ஒரு பாரம்பர்யம். இதில் பெண்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி 29அன்று பெண்கள் தங்கள் ஆண் துணையிடம் பிரபோஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். லீப் ஆண்டு முன்மொழிவு பாரம்பர்யம் 5ம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பழைய பாரம்பரியத்திலிருந்து உருவாகியது. அயர்லாந்தில் தொடங்கிய இது பின் ஸ்காட்லாந்து, ஃபின்லாந்து முழுவதும் பிரபலமடைந்தது. இறுதியாக 1800களின் முற்பகுதியில் அமெரிக்கப் பெண்கள் தங்கள் உறவின் எதிர்காலத்தை. தாங்களாகவே தேர்ந்தெடுக்க முன் வந்தனர்.
இந்த லீப் இயர் பிரபோசலை ஸ்காட்லாந்தின் ராணி மார்கரெட் 1288இல் ஒரு சட்டத்தை இயற்றியதாக கூறப்படுகிறது. பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆண்களிடம் இதை செய்யலாம் பெண்கள் முழங்காலில் மண்டியிட்டு ப்ரபோஸ்செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
செயிண்ட் பிரிட்ஜெட் மற்றும் செயின்ட் பேட்ரிக் ஆகியோரின் புராணக் கதையின் அடிப்படையில் பிப்ரவரி 29அன்று லீப் டே அன்று திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சட்டபூர்வமான அடிப்படையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.