

கண்ணைப் பறிக்கும் பூக்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என கண்ணுக்கு விருந்தாக அமையும் ஒடோமி எம்பிராய்டரி வேலைப்பாடு உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. இதன் கைவேலைப்பாடு தனித்தன்மையுடன் விளங்குவது இதன் தனிச்சிறப்பு. இது பெரும்பாலும் டெனாங்கோ எம்பிராய்டரி யுகடன் சம்பந்தப்பட்டது மெக்சிகோவில் டேனாங்கோ டி டோரியாவில் உள்ள ஒடோமி இனங்களின் அடையாளமாக இது திகழ்கிறது. ஆடைகள், நவீன உடைகள் பாரம்பரிய துணிகளில் இந்த ஒடோமி எம்பிராய்டரி மிக நேர்த்தியாக விளங்குகிறது.
ஒடோமி எம்பிராய்டரியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் மெக்சிகோ ஹிடால்கோ நகரத்தில் உள்ள டெனாங்கோ டி டோரியா பற்றி முதலில் ஆறியவேண்டுமா. டெனாங்கோவின் பாரமாபரியம் தின் ஒடோமியில் ஊடுருவியுள்ளது. இது பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது. 20ம் நூற்றாண்டாக இல் வண்ணமயமான டெனாங்கோ ஒடோமி எம்பிராய்டிரியாக அவதாரம் எடுத்துள்ளது. டெனாங்கோ டிசைன்கள் என்பது நிலப்பரப்பு, தினசரி வாழ்க்கைமுறை, குகை பெயிண்டிங், மற்றும் பாரம்பரிய டிசைன்கள் கொண்டது.
இவை அனைத்தும் வண்ணமயமாக ஒடோமி எம்பிராய்டரி வண்ணத்தில் துணிகளில் செய்யப்படும்போது உலகத்தையே ஒரு துணியில் பார்க்கக் கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்தன்மையோடு இது பல இடங்களுக்கு ஓடோமி கலாசாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதன் தனி டிசைன்களான முயல், மான், பறவைகள் மரங்கள் மாறும் இலைகள் அனைத்துமே கண்ணைக் கவரும் வண்ணத்தில் திகழ்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கற்பனையில் அவை பலவிதமாகவும் பல நிறங்களிலும் காணப்படுகின்றன. பிங்க், மஞ்சள், சிவப்பு என்று இயற்கையை நம் கண்முனானே கொண்டு நிறுத்துகிறார். இயற்கை காட்சிகளோடு குகை பெயிண்டிங் மற்றும் கற்பனை வடிவங்களும் சேர்க்கப்படுவதால் இந்த வகை டிசைன்கள் தனித்துவத்தோடு விளங்குகிறது.
பாரம்பரிய டேனாங்கோ எம்பிராய்டரி என்பது காட்டன் துணியில் முதலில் வரைவது பிறகு அந்த டிசைன்களுக்கு காட்டன் நூல் கொண்டு கையால் எம்பிராய்டரி செய்யப்படுகிறது.
ஒரு துணியை வைப்பதற்கு முன்னாலேயே அதில் எம்பிராய்டரி கைவேலைப்பாடு செய்த பிறகு தைக்கப்படுகிறது. நல்ல வண்ணமயமான பருத்தி நூல்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் துணியில் எல்லா டிசைன்களும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காணப்படுவது ஒடோமியின் தனிச்சிறப்பு.
பாரம்பரிய டெனாங்கோ டெக்னிக் கில் க்ராஸ்டு தையல்கள், மேலும் பட்டாணி இல்லா என்ற முறையில் டிசைன்களில் மிக அழுத்தமான கெட்டியான எம்பிராய்டரியை உருவாக்குகிறது. இதனால் இந்த எம்பிராய்டரி வேலைப்பாடு அதிக நேரம் எடுக்கும். தற்போதைய நவீன உலகில் எல்லாமே மிஷின் மயமாகிவிட்ட நிலையிலா கையால் மிக நிதானமாகவே செய்யப்படும் ஒடோமி ஸ்பெஷலாகக் கருதப்படுகிறது.
ஒடோமி கை வேலைப்பாடில் விலங்குகள், தாவரங்கள் மக்கள் என ஒரு உலகத்தையே காணமுடியும். பாரம்பரிய டிசைன்களில் தினசரி வாழ்க்கைமுறை, கொண்டாட்டங்கள், விவசாயம் ஒடோமி இனங்களின் கலாசாரம் என்று பலவித கதைகளை எடுத்துக் கூறுவதாக இருக்கும். டிசைன்களில் வேலைப்பாடு செய்பவர்களின் கற்பனைத் திறனும் சேர்ந்து இன்றறைய நவீன உலகில் ஒடோமி ஒரு தனி அடையாளத்தைத் பெற்றுள்ளது என்று கூறலாம்.
ப்ரின்ட் செய்யப்பட்ட டிசைன்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு வித்தியாசமான உணர்வை இந்த கைவேலைப்பாடு மூலம் செய்யப்படுகிற ஒடோமி எம்பிராய்டரி ஏற்படுத்தும் வகையில் ஒரு தனிச்சிறப்பு பெற்று விளங்குகிளது. உலக அளவில் இதற்கு ஒரு தனி இடமும் உள்ளது. மக்களை ஈர்க்கும் வகையில் இருப்பதே இந்த ஒடோமியின் தனிச்சிறப்பு.