

பல்கேரியாவின் வர்ணா நெக்ரோபோலிஸில் உள்ள 6,500 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லறையிலிருந்து சில தங்கத்தால் செய்த பொருட்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளார்களால் கண்டெடுக்கப்பட்டன.
அந்த இடத்தில் கிட்டத்தட்ட 300 பழங்காலக் கல்லறைகள் உள்ளன, இருப்பினும், அவற்றில் ஒன்று தனித்துவமாக திகழ்ந்தது. ஆம், கல்லறை எண் 43-ல், 1.5 கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கம் இருந்தது. அந்தத் தங்கம், அலங்காரப் பொருட்கள் மற்றும் பயனுள்ள பயன்பாட்டுப் பொருட்களின் வடிவில் இருந்தது. இது ஒரு புதையல் அல்ல மாறாக தங்கம் என்பது அதிகாரம் மற்றும் அந்தஸ்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்பதற்கான சான்றாகும்.
விஞ்ஞானிகள் இந்த 6,500 ஆண்டுகள் பழமையான தங்கத்தை எவ்வாறு ஆய்வு செய்தார்கள்??
பொருட்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் தொல்பொருள் அறிவியலைப் பயன்படுத்தினார்கள். மேலும் தங்கத்தின் மூலத்தை அறிந்து கொள்ள அவர்கள் அதன் கூறுகளை உற்று நோக்கினார்கள். கருவிக் குறிகளையும், முற்கால உலோக வேலைப்பாட்டுத் திறன்களுக்கான அறிகுறிகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள்.
சமூகப் படிநிலையை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் புதைக்கப்பட்ட இடங்களின் வடிவங்களைப் பயன்படுத்தியதன் மூலமாக இந்தத் தங்கங்கள் இயற்கையாக உருவானதல்ல என்பதை எடுத்துக் காட்டியது. செப்புக் காலத்திலேயே மனிதர்கள் மேம்பட்ட உலோகவியலை வளர்த்திருக்கிறார்கள் என்பதை இந்த பொருட்களின் மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்லறையில் வெறும் தங்கம் மட்டும் கண்டெடுக்கப் படவில்லை. மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிப்பி மணிகளுடன், அரிய வகை கற்களும் கண்டெடுக்கப்பட்டன. இது, வர்ணா இடுகாட்டில் வாழ்ந்த மக்கள் வெளிப் பகுதிகளுடன் வர்த்தகம் செய்ததை வெளிப்படுத்துகிறது. 6,500 ஆண்டுகளுக்கு முன்பும் மக்கள் தனியாக இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்குப் பிரியமான பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டும் வர்த்தகம் செய்துகொண்டும் இருந்தார்கள் என்பதை இது சுட்டி காட்டுகிறது.
அறிவியல் கண்ணோட்டத்தை பொறுத்த வரையில், இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திருப்பு முனையாகும். மனித வரலாற்றில் தங்கம் பயன்படுத்தப் பட்டதற்கான தொடக்கக் காலத்தை இந்த ஆய்வு எடுத்து காட்டுகிறது.
தங்கம் உலகளவில் மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து என்பதை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலமாக நமக்கு தெளிவாக ஒன்று புரிகிறது, அதாவது தங்கத்தின் மீதுள்ள இந்த மோகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே இருந்திருக்கிறது என்பதே ஆகும்.