என்னது! தீக்கோழி பந்தயமா? புதுசா இருக்கே! பொதுவாகவே மனிதர்களுக்கு விளையாட்டின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. விளையாடும் போது நம்மையும் அறியாமல் ஒரு புது உற்சாகம் நம்மை தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அப்படி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறக்கூடிய ஒரு விளையாட்டு தான் தீக்கோழி பந்தயம் (Ostrich Racing).
தென் ஆப்பிரிக்காவை தாண்டி சில அரபு நாடுகளிலும் இவ்விளையாட்டானது பிரபலம். விழாக்களின் போது தென்னாபிரிக்காவில் நடைபெறும் தீக்கோழி பந்தயம் ஒரு முக்கிய விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும். பங்கேற்பாளர்கள் அவரவர் நெருப்புக்கோழிகளுடன் போட்டி தொடங்கும் இடத்திற்கு முன்பாக நிற்க வேண்டும். விசில் ஊதப்பட்டவுடன் நெருப்புக் கோழிகளின் மீது ஏறி ஓடத் தொடங்க வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நம்ம ஊர்களில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தை போன்றதே இந்த நெருப்புக்கோழி பந்தயமும் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் என்ன சிறப்பு என்றால் நெருப்புக் கோழிகள் இருப்பதிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய பறவைகள். சிறுத்தையைத் தவிர வேறு எந்த மிருகத்தாலும் நெருப்பு கோழியை துரத்தி அவ்வளவு சீக்கிரத்தில் வேட்டையாட முடியாது. ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 மைல் தூரத்தை கூட கடந்து விடும். அத்தகைய நெருப்புக் கோழிகளை விளையாட்டு வீரர்கள் அதன் மீது ஏறி அமர்ந்து அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பந்தயத்தில் முதலிடம் வர வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நெருப்புக் கோழிகள் மணிக்கு 72 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுமாம்! ஜாக்கிரதை!