தாம் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள்! வெறும் நம்பிக்கையா? நிஜமா? கற்பனையா?

Ichchadhari naag
Ichchadhari naag
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களில், மிகவும் சக்தி வாய்ந்த இச்சாதாரி நாகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இச்சாதாரி நாகங்களில் பெண் நாகங்களை, இச்சாதாரி நாகினிகள் என்று சொல்கின்றனர். இந்த இச்சாதாரி நாகங்கள் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டவைகளாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நீண்டகாலம் வாழ்பவைகளாகவும், நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும் திறன் பெற்றிருந்ததாகவும் கருதப்படுகிறது.

ஒரு சாதாரண நாகம் 100 வருட தவத்திற்குப் பிறகு ஒரு இச்சாதாரி நாகமாக மாற்றம் பெறுகிறது. சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, இந்நாகங்கள், மனிதர்கள் உட்பட எந்தவொரு உயிரினத்தின் வடிவத்தையும் உடனுக்குடன் எடுக்க முடியும். மேலும் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ முடியும். இச்சாதாரி நாகங்களுக்கு நாகமணி என்ற மாணிக்க கல் அதன் தவப்பலனால் கிடைக்கிறது என்றும், அதனை இச்சாதாரி நாகங்கள் கவனத்துடன் பாதுகாக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கல்லானது மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வத்திற்கு ஈடானது என்பதால், அதனைத் திருட மனிதர்கள் முயற்சி செய்வார்கள். அதனால் நாகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இவ்வாறு நாகங்களின் நாக மாணிக்கத்தைத் திருட முற்படும் பொழுது நாகங்கள் மனிதர்களைக் கொல்கின்றன. மனிதர்களும் நாகங்களைக் கொல்கின்றனர்.

ஒரு இச்சாதாரி நாகத்தினை மனிதர்கள் கொல்லும் போது, அதனைக் கொலை செய்தவர்களின் உருவங்களை நாகங்கள் தங்கள் கண்களில் சேமிக்கின்றன. இறந்த இச்சாதாரி நாகத்தின் உறவினரான மற்றொரு இச்சாதாரி நாகம் கொன்றவர்களை அதன் மூலம் அறிந்து கொண்டு, கொன்றவர்களைப் பழி வாங்குகிறது. இச்சாதாரி நாகங்கள் எந்த உயிரின் வடிவத்திற்கு மாற்றம் பெற்றாலும், மகுடி இசையை ஒலிக்கும் போது, அது எந்த உருவத்தில் இருந்தாலும் மீண்டும் நாகமாக மாறிவிடும் என்கிற நம்பிக்கையுமுண்டு! இச்சாதாரி நாகினிகள் மனிதனைக் காதல் செய்து, திருமணம் செய்து கொண்டால், அதனுடைய அனைத்துச் சக்திகளையும் இழந்து ஒரு சாதாரணப் பெண்ணாகவே வாழமுடியும்.

இதையும் படியுங்கள்:
தேசிய விலங்காக புலியை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?
Ichchadhari naag

மேற்காணும் கற்பனையை மையப்படுத்தி, இச்சாதாரி நாகங்களை முதன்மையாகக் கொண்டு, குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாகராஜ் என்ற காமிக்ஸ் கதாப்பாத்திரம் இதனை அப்படையாகக் கொண்டது. இதே போன்று, இந்தியில் புகழ்பெற்ற காமிக்ஸ் கதாப்பாத்திரமாக துளசி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் இச்சாதரி நாகங்களை முதன்மையாகக் கொண்ட கதைகளுடன் வெளியாகியிருக்கின்றன.  

logo
Kalki Online
kalkionline.com