உலகம் வியக்கும் நமது ராணுவ வலிமை!

நமது ராணுவம் உலகிலேயே பெரிய ராணுவங்களுள் ஒன்றாகும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக நமது ராணுவம் திகழ்கிறது.
indian armed forces
indian armed forces
Published on

ஆபரேஷன் சிந்தூர் என்ற நமது ராணுவத்தின் அற்புதமான நடவடிக்கை உலகையே நம்மை வியந்து பார்க்க வைத்த ஒரு நடவடிக்கையாகும்.

2025 ஏப்ரல் மாதம் காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தான் ஆபரேஷன் சிந்தூர். 2025 மே மாதம் 7ம்தேதியன்று நமது ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தன.

நமது ராணுவம் உலகிலேயே பெரிய ராணுவங்களுள் ஒன்றாகும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக நமது ராணுவம் திகழ்கிறது.

இந்திய ராணுவத்தில் பதினான்கு லட்சத்து நாற்பதினாயிரம் வீரர்கள் நாட்டைப் பாதுகாக்கும் சேவையைச் செய்து வருகின்றனர்.

51 லட்சம் பேர்கள் தன்னார்வத் தொண்டர்களாக ராணுவத்தில் உள்ளனர்.

2025ம் ஆண்டு நமது பட்ஜெட்டில் ரூ.7.86 லட்சம் கோடி ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டது.

2023ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நாம் போர் தளவாடங்களையும் சாதனங்களையும் இறக்குமதி செய்தோம்.

ஆனால் இப்போது 12 பொதுத்துறை நிறுவனங்கள் நமது போர் சாதனங்களைத் தயாரிக்கின்றன.

புதிய வடிவமைப்பிலான ஏவுகணைகளை இந்தியா இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. அஸ்த்ரா, தேஜஸ் போன்ற பெயர்கள் உலகையே நம்மை வியந்து பார்க்க வைத்திருக்கின்றன.

அஸ்த்ரா, ப்ரஹ்மாஸ், அக்னி போன்றவை வியக்க வைக்கும் ஏவுகணைகளாகும்.

தேஜஸ் என்னும் லைட் காம்பாட் ஏர்க்ராப்ட் சேடக், HTT- 40 ட்ரெயினரஸ் உள்ளிட்டவை தாக்குதலைத் திறம்படச் செய்யும் விமானங்களாகும்.

இந்தியத் தயாரிப்பு என்று பெருமைப்பட வைக்கும் இவை அனைத்தும் இந்திய ராணுவத்தின் வலிமையை உலகுக்கு காட்டுகின்றன.

அது மட்டுமல்ல, இப்போது உலகில் உள்ள நூறு நாடுகளுக்கு நாம் தற்காப்பு சாதனங்களைத் தயாரித்து ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.

இன்னும் வர்ணாஸ்திரம், மாரீச் போன்றவை சமீபத்திய இந்தியப் படைப்புகளாகும்.

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தில் பல இடங்களில் ட்ரோன்கள் திறம்படப் பயன்படுத்தப்பட்டன.

பெங்களூரில் உள்ள Tonbo Imaging ஒரு புதிய தயாரிப்பைச் செய்து நமது ராணுவத்திற்கு வழங்கியது.

நமது ராணுவம் தாக்குதல்களை இரவு நேரங்களில் திறம்படச் செய்து முடித்ததற்குக் காரணமே இவை போன்ற நவீன சாதனங்களே!

இப்போது உலக நாடுகள் நமது ராணுவ வலிமையையும் கட்டமைப்பையும் நன்கு புரிந்து கொண்டு விட்டன.

இதையும் படியுங்கள்:
300 கோடிக்கு ட்ரோன் வாங்கும் இந்திய ராணுவம்… என்ன காரணம்?
indian armed forces

வாலாட்டினால் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பது முதல் செய்தி. தாக்க முனைந்தால் தாக்கியவன் அழிவான் என்பது அடுத்த செய்தி.

நமது ராணுவ வீரர்களைப் பாராட்டிப் போற்றுவோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்துச் சாதனங்களையும் தயாரித்து வழங்கும் நிறுவனங்களையும் போற்றுவோமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com