பிறக்கப்போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா?விரல்களில் இருக்குது விவரமான விஷயம்!

கைரேகை சாஸ்திரம்: விரல்களைப் பற்றிய பொதுவான குறிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.
Palmistry
Palmistry
Published on

நமது கலாச்சாரத்தில் ஜாதகம், கைரேகை(Palmistry) ஜோதிடம் பார்ப்பதற்கு என்று தனி மகத்துவம் உண்டு. அதை தெரிந்து கொள்வதற்கு அனைவரும் ஆர்வம் காட்டுவதுண்டு. விரல்களைப் பற்றி பொதுவான குறிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.

1. கை விரல்களில் மடிப்புகள் இல்லாத செழுமையாக அமையப்பட்ட விரல்களை உடையவர்கள் உலகத்தில் நன் மதிப்பும், நல்ல வாழ்க்கையும் அமையப் பெற்று மகிழ்ச்சியுடன் விளங்குவார்கள். விரல்கள் தட்டையாகவும், முனைகள் சதுரமாகவும் அமையப் பெற்றவர்கள் பொறியியல் துறையில் சிறந்த நிபுணர்களாக விளங்குவார்கள். விரல்கள் குட்டையாக இருப்பவர்கள் மற்றவர்களின் குண தோஷங்களுக்கு தகுந்தவாறு நடந்து கொள்வார்களாம்.

2. ஆட்காட்டி விரல் நடுவிரலுக்கு சமமான நீளம் உடையதாக வளர்ந்திருந்தால் அவர்கள் உல்லாசப் பிரியர்களாக இருப்பார்கள். சுவையான உணவுகளை அறுந்துவதிலும், பகட்டான ஆடைகளை அணிவதிலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்குமாம்.

3. விரல்களின் நுனி கூர்மையானதாகவும் குவிந்தும் இருப்பவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்குவார்கள் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

4. கட்டை விரல் நுனியானது சுண்டு விரலில் நடு மையக்கணு வரையில் நீண்டிருப்பவர்கள் சிற்பம், ஜோதிடம் போன்ற நுண்கலைகளில் நிபுணர்களாக விளங்குவார்கள். கற்பனை சக்தி மிக்க அவர்களுக்கு இத்தகைய அமைப்பு காணப்பட்டால் அவர்கள் எந்த விஷயத்தையும் மிகவும் சீக்கிரமாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம்.

5. கட்டை விரலில் வெளிப்புற ஓரத்தில் அதனுடைய இரண்டு கணுக்களுக்கும் இடையில் அமைந்துள்ள ரேகைகளைச் சந்தான ரேகைகள் என்று வழங்குவார்கள். கிளைகளை உடையதாக இருந்தால் பெண் குழந்தைகள் எனவும், பின்னலாக அமைந்திருந்தால் ஆண் குழந்தைகள் எனவும் நிச்சயிக்க வேண்டும். அதில் எத்தனை ரேகைகள் தொடர்ந்து அமைந்துள்ளனவோ அத்தனை குழந்தைகள் என்று எண்ணிக்கையைக் கூறலாம். ரேகைகளில் நடுவில் விடுபடாமல் நீளமாக இருக்குமாயின் தீர்க்காயுள் உடைய சந்தானங்கள் என்று குறிப்பிடலாமாம்.

6. சுண்டு விரலின் கீழ் குறுக்குப் பகுதியில் இரண்டு ரேகைகள் இருப்பவர்கள் தான் செய்யப்போகும் எத்தகைய வேலைக்கும் தக்க தகுதியும், திறமையும், நற்சான்றுகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் வெற்றி அடைவதோடு, பொருளாதார இன்பத்தையும் அடைவார்கள். எடுத்த காரியங்கள் விரைவில் முடிவு பெறும் பாக்கியம் உடையவர்களாம்.

7. நடுவிரலின் கீழ்ப்பகுதியில் அத்தகைய ரேகைகள் அமையப் பெற்றவர்களுக்குச் செல்வாக்கும், தொழில் துறை முன்னேற்றமும் உண்டாகும் என்று இலட்சண அமைப்பு கூறுகின்றது.

இதையும் படியுங்கள்:
Richest State | இந்தியாவின் 6 பணக்கார மாநிலங்கள் இவைதான்...
Palmistry

8. மோதிர விரலின் கீழே இத்தகைய ரேகைகள் அமைய பெற்றவர்கள் பல கலைகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களாகத் திகழ்வார்கள். ஆட்காட்டி விரலில் இத்தகைய ரேகைகள் அமையப் பெற்றவர்கள் ஞானிகளாகவும், உலகப் புகழ்பெற்ற யோகியராகவும் விளங்குவார்கள் என்றும் சுண்டு விரலின் அடியில் இத்தகைய ரேகைகள் அமையப்பெற்றவர்கள் சிறுவயதில் இருந்து வாழ்நாள் முழுமையும் சுகஜீவிகளாகவும் இருப்பார்கள் என்று லட்சண அமைப்பு கூறுகின்றது.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி மாத கடைமுழுக்கும் முடவனுக்கு அருள் பாலித்த முடவன் முழுக்கும்!
Palmistry

9. கட்டைவிரலின் உட்புறத்தும் முதற்கணுவின் அருகில் நெல்லை போலவோ, கோதுமை போலவோ தோற்றம் உடையதாக இரண்டு ரேகைகள் வளைந்து இருமுனைகளுடன் சேர்ந்தும் கூடி இருப்பின் அதற்கு தானிய ரேகை என்று பெயர். இத்தகைய அமைப்புடைவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் தன தானிய சம்பத்துக்களும் விவசாயிகளுக்குப் பயிர் பச்சை, பசு, எருதுகள், ஆடுகள், கோழிப் பண்ணைகள் போன்றவை விருத்தி அடைந்தும் நற்பயனை அளிக்கும். உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள் என்று லட்சண சாஸ்திரம் கூறுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com