கழுகின் உதவியோடு வேட்டையாடும் மக்கள்!

People with Different Culture
People with Different Culture

பல நூற்றாண்டுக்காலமாக கழுகின் துணையோடு வேட்டையாடும் ஒரு இன மக்களின் சுவாரசியமான கலாச்சாரம் பற்றி பார்ப்போமா?

உலகம் முழுவதும் பல வித்தியாசமான கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு இன மக்களும் தங்கள் வசதிக்காகவும், தேவைக்காகவும் தங்களுக்கேற்ப பல கலாச்சாரங்களை தோற்றுவித்து பின்பற்றி வருகின்றனர். அவை அனைத்துமே வித்தியாசமாகவும், நாம் ஆச்சர்யப்படக்கூடியதாகவும் இருக்கும்.

அந்தவகையில் தற்போது, 15வது நூற்றாண்டிலிருந்து வாழ்ந்து வரும் மக்கள், கழுகின் உதவியோடு வேட்டையாடியதைப் பற்றியும், அவர்களைப் பற்றிய இன்னும் சில தகவல்களையும் பார்ப்போம்.

15வது நூற்றாண்டு காலத்திலிருந்து மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் கஜாக்ஸ் இன மக்கள். இவர்கள் அரை நாடோடி என்பதால், கஜகஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கஜாக்ஸ் மக்களின் இரண்டு தூண்கள், ஒன்று குதிரை, மற்றொன்று கழுகு. கஜாக்ஸ் கலாச்சாரத்தின் முதன்மையான வழக்கமே கழுகின் உதவியோடு வேட்டையாடுவதுதான். நரி, முயல் போன்றவற்றை வேட்டையாடுபவர்கள் அவர்கள். வேட்டையாடி விலங்குகளை உண்ணும் இவர்கள், சிலசமயம் வேட்டையாட குடும்பத்தைவிட்டு நெடு தொலைவு செல்வார்கள். அவர்கள் ஒரு கழுகிற்கு, வெகுதொலைவு இருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு மிகவும் நுணுக்கத்துடன் பயிற்சி அளிப்பார்கள்.

இவர்களுடைய பாரம்பரியத்தின்படி, 13 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு கழுகுடன் பழக பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த கழுகு இருக்கும் வரை கழுகின் துணையுடன் வேட்டையாடி தங்கள் குடும்பத்தின் பசியைப் போக்குவார்கள். அந்த கழுகு இறந்தால், அடுத்த கழுகுடன் சில காலம் பயிற்சியெடுத்து வேட்டையாடுவார்கள். சிறிய பெண் கழுகுகள் பறக்கத் தடுமாறியது என்றால், அதனை பாசத்துடனும் கவனத்துடனும் 7 வருடங்கள் வளர்த்து பின்னர் முட்டையிட காட்டுப் பகுதிகளுக்குள் அனுப்பி வைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
‘இரவுகளின் அரசி’ என அழைக்கப்படும் பூ எது தெரியுமா?
People with Different Culture

கஜாக்ஸ் மக்களின் மிகவும் முக்கியமான திருவிழா, தங்க கழுகு திருவிழா. ஓநாய் தோலை உடையாக அணிந்து குதிரையின் மீது ஒரு மலைக்கு மேல் ஏறுவார்கள். கையில் தங்க கழுகுடன் வெகுநேரம் ஏறி, பின்னர் அந்த மலையின் உச்சியிலிருந்து பறக்கவிடுவார்கள். இதுதான் அவர்களின் பாரம்பரிய திருவிழாவாகும்.

இப்போது உலகம் முழுவதும் கழுகு துணையுடன் வேட்டையாடுவது அங்கீகரிக்கப்பட்டாலும், அந்த மக்கள் கழுகுக்கு இப்போது பயிற்சியளிப்பதும் இல்லை, வேட்டையாடுவதும் இல்லை. அவர்களின் இந்தக் கலாச்சாரம் சில வருடங்களுக்கு முன்னரிலிருந்தே மறைய ஆரம்பித்துவிட்டது. மாற்றத்திற்கான நேரம் இதுவென்று, வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பித்துவிட்டார்கள், கஜாக்ஸ் மக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com