‘இரவுகளின் அரசி’ என அழைக்கப்படும் பூ எது தெரியுமா?

பிரம்ம கமலம் பூ
பிரம்ம கமலம் பூ

ண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூதான். ‘இரவுகளின் அரசி’ என்று அழைக்கப்படுகிறது. பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்களையே இவ்வாறு அழைக்கிறோம். இளவேனில் காலத்தில் மாத்திரமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் பூ நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயம் கொண்டது. அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பிரதேசத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என அறியப்படுகிறது.

ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. செடியின் இலை விளிம்பு பகுதியில் இருந்து இது பூக்கிறது. இத்தகைய அதிசய பூவின் நடுவில் பிரம்மா படுத்திருப்பது போன்றும் அதன் மேல் நாகம் படம் எடுத்து இருப்பது போன்றும் காணப்படும். அது மட்டுமில்லாமல் இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால், விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த மலர் மலரும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த அற்புதமான மலரை ஹிமாலயாவிலேயே அதிகம் காண முடியும்.

உத்தரகாண்ட் மாவட்டங்களான கேதார்நாத் ஹேம்குந்த் சாகிப் மற்றும் துங்கநாத் இடங்களில் பிரம்ம கமலம் பூவை அதிகமாகப் பார்க்கலாம். இந்த பூ ஆன்மிக மலராக கருதப்படுகிறது. பத்ரிநாத் சன்னிதியில் மகாவிஷ்ணுவுக்கும், கேதார்நாத் சன்னிதியில் சிவனுக்கும் இந்த மலர் பூஜிக்கப்படுகிறது செப்டம்பர், அக்டோபரில் நடைபெறும் நந்தாஷ்டமி திருவிழாவின்போது கோயில்களில் பிரசாதமாக இது வழங்கப்படுகிறது.

பிரம்ம கமலம் பூ இந்து மதத்தில் குறிப்பிடத்தக்க ஆன்மிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. குலதெய்வத்திற்கு இந்த மலர் கொண்டு அர்ச்சனை செய்பவர்களுக்கு ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இது தூய்மை, ஞானம் மற்றும் ஆன்மிக சாதனை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் சக்தி பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி இந்த மலருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சீவினி மூலிகையின் உதவியுடன் லட்சுமணன் உயிர் பெற்ற போது தேவர்கள் மகிழ்ச்சியில் வானத்திலிருந்து பிரம்ம கமல பூக்களை பொழிந்ததாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக இந்தப் பூ பூமியில் விழுந்து பள்ளத்தாக்கில் வேரூன்றியது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் நபரா நீங்கள்? அச்சச்சோ! 
பிரம்ம கமலம் பூ

இந்தச் செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் தண்டிலிருந்து வளரும். அதிலும் இதன் இலைகளைப் பார்த்தால் தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டு இருக்கும். மேலும் இதிலிருந்து வரும் பிரம்ம கமலப்பூ இலைகளில் இருந்தே வளர்கிறது.

இது இரவிலேயே மலரும் பூ வகையைச் சேர்ந்தது. சில சமயங்களில் மாலை நேரத்தில் இந்தப் பூவானது முழுமையாக மலர்ந்துவிடும். ஆனால் இந்த மலர் பொதுவாக, இரவு பத்து மணிக்கு மேல்தான் முழுமையாக மலரும். பிரம்ம கமலம் பூவை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பூவை அழற்சி எதிர்ப்பு குறைக்கவும் வலியை குறைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

பிரம்ம கமலம் பூவில் ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளதால் இது ஃபிரீரேடிக்கல்களின் தீங்குகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு நலம் சேர்க்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com