மூட நம்பிக்கைகள் என்பது உலகெங்கிலும் நிறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக சீனர்களின் மூட நம்பிக்கைகள் யாருக்கும் சற்றும் சளைத்தது கிடையாது. இந்தியாவிலும் சில மூட நம்பிக்கைகள் உள்ளன. அதிலும் முந்தைய காலங்களில் கர்ப்பகால பெண்கள் குயில் மாமிசம் சாப்பிட்டால் குழந்தைக்கு குயில் போல குரல் இருக்கும், அணில் சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும் என்பது முந்தைய நம்பிக்கைகள், தற்காலத்தில் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை வெண்மை நிறத்தில் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்தியாவில் அனைத்து மதப் பெண்களும் கர்ப்ப காலத்தில் குங்குமப் பூவை பாலில் கலந்து குடிக்கும் வழக்கம் வைத்துள்ளனர்.
சீன பாரம்பரியத்தில் உள்ள சில நம்பிக்கைகள் நம்புவதற்கு மிகவும் வினோதமானவை. ஆனாலும் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை கை விடுவது இல்லை. அவர்களிடம் நிறைய சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. கம்யூனிச அரசாங்கம் ஆரம்பத்தில் நீண்ட காலம் மக்கள் நம்பிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்காமல் ஒரு கட்டத்தில் மத நம்பிக்கைகளில் தலையிடுவதை தவிர்த்து விட்டது. ஆயினும் சீனாவில் தீவிரமாக மதங்களை பின்பற்றுபவர்களை மதமில்லாதவர்கள் என்று தான் குறித்துள்ளது.
சீனாவின் பண்டைய தைச்சான் ஷு என்ற இலக்கியத்தில் உள்ள கர்ப்ப கால தகவலின் படி, கரு வளரத் தொடங்கும் இரண்டு மூன்று மாதங்கள் தொடங்கும் போது மட்டுமே தண்ணீரைப் பெறுகிறது. இந்த கட்டத்தில், கர்ப்பிணிப் பெண்கள் கோதுமை, அரிசி மற்றும் விலாங்கு மீன் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். இவற்றின் சத்துக்கள் இரத்த உருவாக்கத்திற்கு உதவுவதோடு கண்களுக்கும் நல்லது.
புத்தகத்தில் உள்ள இன்னொரு மூட நம்பிக்கையின்படி, வெள்ளை நாயின் மண்டை ஓட்டை சாப்பிட்டால் அது கரு வளர்ச்சிக்கு உதவுவதோடு அழகான குழந்தையும் பிறக்குமாம். மண்டை ஓட்டை வேகவைத்துச் சாப்பிட்டு, 'பொருத்தமான' பலன்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதே நேரம் ஆட்டுக்குட்டியின் இறைச்சியை உண்பது குழந்தை பிறந்த பிறகு வலிப்பு நோயால் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பம் பற்றிய சீன நம்பிக்கைகள்:
சீனாவில் நடைமுறையில் உள்ள மற்றொரு நம்பிக்கை, கர்ப்பிணிப் பெண்கள் இரவு உணவு உண்ணும்போது ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிறிய கிண்ணம் ஒரு சிறிய தலையுடன் ஒரு குழந்தையை பிரசவிக்கும் அகன்ற தட்டில் சாப்பிட்டால் குழந்தையின் தலை பெரியதாக இருக்குமாம்.
பழங்காலத்தில், மருத்துவச்சிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு உதவியபோது, அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய வேண்டிய சூழல் வந்தால் அவர்கள் கத்தியை எடுக்கும் முன்னே நேராக சமையல் அறைக்கு சென்று வருவார்கள். இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள சீன நம்பிக்கை, சமையல் அறையில் சென்று விட்டு வந்து, பின்னர் அறுவை சிகிச்சை கத்தியை எடுத்தால், அந்தப் பெண்ணுடன் வந்திருக்கக்கூடிய அனைத்து தீய சக்திகளையும் எதிர்மறையான ஆற்றல்களையும் அழித்துவிடும் என்று கூறுகிறது. மூட நம்பிக்கை என்ற பெயரில் விலங்குகளை துன்புறுத்தாமல் இருந்தால் சந்தோஷம்.