புனுகுப்பூனையும் ஜவ்வாதும் - என்ன சம்பந்தம்?

Punugu Cat and Jawadhu - What's the Connection?
Punugu Cat and Jawadhu - What's the Connection?Picasa
Published on

றுமணம் வீசும் ஜவ்வாது – அந்தக் காலத்திலிருந்து நம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கினாலும், அது நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல! முற்காலம் தொட்டு பாரசீக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமணப் பொருள் இது ஆகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்க்கின்றனர். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும்பொழுது அதன் உடலிலிருந்து சுரக்கும் மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை, ‘புனுகு’ என்பார்கள். இதனுடன் சந்தனத்தை தூளாகக் கலந்துவிட்டால் அதுதான் நறுமணம் வீசும் ஜவ்வாது.

Zabād (சபாத்) - என்ற அரேபியச் சொல்தான் தமிழில் 'சவ்வாது' என்றும், ஆங்கிலத்தில் 'சிவெட்' என்றும் அழைக்கப்படுகிறது. 'சிவெட்' என்று அழைக்கப்படும் ஒரு வகைப் பூனையின் பிறப்புறுப்புக்கு அருகில் உள்ள சுரப்பியிலிருந்து பெறப்படும் - மஞ்சள் வண்ணக் கொழுப்புப் பொருள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
புராணக் கதை பேசும் சுரேந்திரபுரி அருங்காட்சியகம்!
Punugu Cat and Jawadhu - What's the Connection?

இவற்றை புனுகுப்பூனை என்றும் நம்நாட்டில் சொல்வதுண்டு. கஸ்தூரி போன்ற வாசனையுடன் கூடிய இந்தக் கழிவிலிருந்தே புனுகு, சவ்வாது போன்ற சில வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தற்காலத்தில் வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தடை உள்ளதால், சந்தையில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com