எலிசபெத் மகாராணி அவர்களுக்கு 1952 ம் ஆண்டு மகாராணி என்ற பட்டம் சூட்டப்பட்டது. 2022ம் ஆண்டு 96 வயதில் மறைந்தார். ஹைதராபாத்தில் நியாமான மீர் காசிம் அலிகான் என்பவர் தான் இந்தியாவின் முதல் மில்லியனர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 1940ம் வருடம் 1700 கோடி ஆகும். இவர் பணக்காரராக புகழ்பெற்றது மட்டுமல்லாமல் எலிசபெத் மகாராணியிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த புகழும் உடையவர்.
எலிசபெத் மகாராணி அவர்கள் 1947ம் ஆண்டு இளவரசர் ஃபிலிப்பை மணந்த போது திருமணத்திற்கு இவரால் வரமுடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு விலையுயர்ந்த நெக்லஸை கார்டியர் என்ற பெரிய நகைக்கடைக்காரரிடம் கொடுத்து பரிசாக அனுப்பியிருந்தார். மிக நுணுக்கமான டிசைன் கொண்ட இதில் சுமார் 300 வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. மிகச்சிறந்த பூ வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
எலிசபெத் மகாராணிக்கு மிக விலை உயர்ந்த நகைகளின் மீது மிகுந்த விருப்பம் உண்டு. பலவருடங்களுக்குப் பிறகு 2014 ம் ஆண்டில் வேல்ஸ் இளவரசி இந்த நெக்லசை அணிந்தார். செய்திகளின்படி ஹைதராபாத் நிஜாம் அளித்த நெக்லஸ் தான் உலகிலேயே மிக மதிப்புள்ள ராயல் நெக்லசாக மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. இதன் விலையின் மதிப்பு 66 மில்லியன். அதாவது இன்றைய கணக்குப்படி 694 கோடிகள் ஆகும்.
ஜுலை 21 ம் தேதி 2022 ம் வருடம் அரச குடும்பம் தன் இன்ஸ்டாக்ராமில் ஹைதராபாத் நிஜாமின் பரிசான இந்த நெக்லஸ் அரச குடும்பத்துப் பொக்கிஷமாக கருதப்படடுகிறது என்று செய்தி குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த இன்ஸ்டா போஸ்டரில் எலிசபெத் மகாராணி விலையுயர்ந்த வைர நெக்லஸ் அணிந்திருந்த படத்தை நெக்லசின் நுணுக்கமான திறனை வெளிப்படுத்தும் அளவிற்கு க்ளோசப்பான மகாராணியார் படத்தையும் வெளியிட்டிருந்தது. அரச குடும்பத்து முதலாகிய பொக்கிஷமாக இந்த பரிசு கருதப்பட்டு வருகிறது.