
ராமர் பாலம் என்று ஒன்று இருந்ததா என இன்னமும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை சிலர் ராமர் பாலம் என்றும் சிலர் ஆதாம் பாலம் என்றும் அழைக்கின்றனர். ராமர் பாலம் என்பது இன்றளவும் புரியாத புதிராகத்தான் உள்ளது.
இலங்கையில் ராவணன் சீதையை கடத்தி வைத்த போது சீதையை மீட்பதற்காக அனுமன் தலைமையில் கற்பாலம் அமைக்கப்பட்டதாக வரலாறு மற்றும் இதிகாசங்கள் கூறுகின்றன. இலங்கையில் உள்ள ஆதாமின் சிகரத்தை அடைய முதன் முதலில் தோன்றிய ஆதாம் இந்த இந்த இடத்தை கடற்க முற்பட்டதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப் படுகிறது.
உண்மையில் இது ராமேஸ்வரம் இலங்கையில் உள்ள மன்னார் இரண்டையும் இணைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது. இதன் நீளம் சுமார் 50 கிலோமீட்டர் என்று சொல்கிறார்கள். 1480 வரை கடல் மட்டத்திலிருந்து மேலிருந்தது. இந்த இடைப்பட்ட தூரம் கனிம வளம் நிறைந்த பகுதியாக உள்ளது.
15 ஆம் நூற்றாண்டு வரை இந்த இடத்தை கால்நடையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாலம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என இதிகாசம் கூறுகிறது. சீதையை மீட்க அனுமன் தலைமையில் நளன் என்பவரது முயற்சியால் இந்த கடற்பாலம் கட்டப்பட்டது .
ஒவ்வொரு கற்களும் ராமர் பெயர் பொறிக்கப்பட்டதால் இந்த கற்கள் அனைத்தும் மிதந்த வண்ணம் இருந்தது. 2007 ஆம் ஆண்டு தொல்லியல்துறை இது இயற்கையாக உருவானது என்று விளக்கம் கொடுத்துள்ளது.
மத நம்பிக்கை உள்ளவர்கள் இதனை ராமர் மிதக்கும் பாலம் என்று கூறுகின்றனர். 1964 வரை இந்த பாலம் வெளியே தெரியும் படிதான் இருந்தது அதன் பின்னர் நீருக்கு அடியில் மூழ்கிவிட்டது.
இந்தக் கடல் பகுதியானது மூன்று அடி முதல் 30 அடி வரை ஆழம் கொண்டுள்ளது வானத்திலிருந்து பார்த்தால் இந்தப் பாலம் தெளிவாக தெரியும்.
ராமாயணத்தில் இது சேது பந்தன் என அழைக்கப் படுகிறது.இந்தப் பாலம் தேசிய பாரம்பரிய சின்னமாக உள்ளது. இந்தப் பாலம் ஒரு தடையாக இருப்பதால் சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் கப்பல்கள் அனைத்தும் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.
இந்தப் பாலத்தை ஒட்டி சுண்ணாம்பு கற்களும் பவள பாறைகளும் நிறைந்து காணப்படுகிறது. ராமாயண காலத்தின்படி கிமு ஏழாம் நூற்றாண்டில் அனுமன் தலைமையில் வானர சேனைகள் இந்த பாலத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வானர சேனைகள் கட்டியதா அல்லது இயற்கையாக அமைந்த மணல் திட்டா என்பது இன்றைய வரை புரியாத புதிராக உள்ளது.
எது எப்படியோ இந்த இடம் இதன் நீளம் சுமார் 30 மைல் தூரம் உள்ளது ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இணைக்கும் பகுதியாக இந்த இடம் உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு ஹெலிகாப்டரில் தாழ்வாக சென்றபோது இந்த ராமர் பாலத்தை பார்வையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.