'ஆலமரத்தடியில் பஞ்சாயத்து' நடக்க இந்தப் புராணம் தான் காரணமா?

Panchayat
Panchayat

பஞ்சாயத்து என்றாலே ஒரு பெரிய ஆலமரம், அதற்குக் கீழே ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள், வழக்காளிகள் எனப் பல நிகழ்வுகள் நம் நினைவில் வரும். நீங்கள் என்றேனும் சிந்தித்தது உண்டா? ஏன் பஞ்சாயத்து என்றாலே ஆலமரத்தடியிலும் நடக்கிறது என்று. நாம் எல்லோரும் நினைத்திருப்போம் ஆலமரம் நல்ல நிழல் தரக்கூடிய மரம் அதற்குக் கீழ் எத்தனை பேர் வேண்டுமானாலும் கூடி நிற்கலாம். பஞ்சாயத்து பேசுவதற்கும் உகந்ததாக இருக்குமென்று அங்கு அனைவரும் கூடி இருந்திருப்பார்கள் என்று எண்ணி இருப்போம். ஆனால் அது மட்டும் காரணம் கிடையாது இதற்குப் பின்னால் ஒரு பெரிய புராணக் கதையை உள்ளது. அதைப் பற்றி இதில் பார்ப்போம்.

Panchayat
Panchayat

நம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது என்பது முக்கியமான வழக்கமாகும். நம் முன்னோர்கள் உயிர் நீர்த்த நாளன்று அவர்களுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து வைத்து ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ பிண்டம் வைத்து வழிபட்டால் நம் முன்னோர்கள் காக்கை வடிவமாக வந்து அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்பது மரபு.

ராமன் இலக்குவன் சீதை மூவரும் வனவாசம் சென்ற பிறகு தசரதன் தன் இன்னுயிரை நீர்த்தார். ஒரு வருடம் கழித்து அவருக்குத் திதி கொடுக்கும் நாளும் வந்தது அச்சமயம் அவர்கள் கயா பகுதியில் தங்கள் வனவாசத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். ராமன் இலக்குவனிடம் "பக்கத்து கிராமங்களுக்கு சென்று திதிக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வா" என்று அனுப்பி விட்டார். இலக்குவன் சென்று விட்டு வெகு நேரம் கழித்தும் திரும்பி வரவில்லை. திதிக்கான இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். சென்ற ராமனும் திரும்பி வருவதற்குக் காலம் தாமதமானதால் சீதை காட்டில் பறித்து வந்த பழங்களையும் சில உணவுகளையும் திதிக்குப் பிண்டமாகச் செய்து திதி கொடுத்தாள். அப்போது மேலிருந்து ஒரு அசரீரி கேட்டது "நீ கொடுத்த பிண்டத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்" என்று. சீதைக்குப் பெற்றுக் கொண்டது யார் என்ற ஒரு சந்தேகம் இருந்தது அதனால் இறைவனை வேண்டி பிண்டத்தைப் பெற்றவர் யார் என்று என் முன்னால் வரும்படி வேண்டினார். தசரதனும் முன்னால் வந்து நான்தான் ஏற்றுக் கொண்டேன் என்று சீதையிடம் கூறினார். நான் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்ற மரபைச் சீதை உடைத்தால் இதனால் சீதைக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரியின் சொர்க்க பூமி ஆரோவில்!
Panchayat

தன் கணவனும் கொழுந்தனும் வந்தால் தான் படைத்த பிண்டத்தைத் தசரதன் ஏற்றுக் கொண்டார் என்று கூறுவோம். அப்படி நம்பவில்லை என்றால் சாட்சி சொல்ல இங்கு ஆலமரம், ஆறு, தர்ப்பை புல்,பசு உள்ளது. தற்சமயம் ராமனும் இலக்குவனும் திதிக்குத் தேவையா பொருட்களுடன் சீதையின் முன் வந்தனர். சீதை நடந்தவற்றையெல்லாம் விளக்கி ராமனிடமும் இலக்குவனிடமும் கூற ராமனும் இலக்குவனும் இதனை நம்பவில்லை பதிலுக்கு அவள் மேல் கோபப்பட்டனர். சீதை நம்ப வைக்க ஆலமரத்தையும், ஆற்றையும், தர்ப்பை புல்லையும், பசுவையும் சாட்சிக்கு அழைத்தாள். ஆனால் ஆறும், புல்லும், பசுவும் ராமன் கோபித்துக் கொள்வார் என்று சாட்சி சொல்ல வரவில்லை. ஆலமரம் மட்டுமே உண்மையைக் கூறியது. ராமன் இதை நம்பாமல் "திதி கொடுக்க இன்னும் சிறிது நேரம் தான் உள்ளது, அதற்குள் கொண்டு வந்த பொருட்களை வைத்து உணவைச் சமை" எனக் கூறினார். சீதையும் கணவனின் கட்டளையின்படி உணவைச் சமைத்தாள். ராமன் தந்தைக்குத் திதிகொடுக்கப் பிண்டத்தைப் பிடித்து வைத்து தந்தையை அழைத்தான் தசரதன் ராமனிடம் "ராமா இரண்டாவது முறை எனக்கு ஏன் திதி கொடுக்கிறாய்?" எனத் தசரதன் கேட்ட உடன் ராமனுக்கு அப்பொழுதுதான் உண்மை புரிந்தது. உடனே சீதை ஆற்றை இனி நீர் இல்லாமல் வற்றிப் போவாய், தர்ப்பைப் புல்லைச் சிவனுக்கு இனி அர்ப்பணம் செய்ய மாட்டார்கள், பசுவிடம் உனக்கு முன்னால் வீற்றிருக்கும் நான் இனி உனக்குப் பின்னால் சென்று விடுவேன். ஆலமரத்தை நோக்கி "நீ பல தலைமுறைகள் வாழ்வாய். உலகம் அழியும் பொழுது உன் இலையில் பரம்பொருளான திருமால் அதில் ஏறிப் பயணம் செய்வார்" எனச் சாபமும் வரமும் அளித்தாள்.

Ramayanam
Ramayanam

ஆலமரம் இறைவன் கோபப்படுவார் என்று எண்ணி உண்மையைச் சொல்லாமல் மறைக்கவில்லை, தைரியமாக முன்வந்து உண்மையைக் கூறியதால் பஞ்சாயத்துகளும் ஆலமரத்தின் முன்னிலையில் நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com