

‘ஒரு தவறு செய்தால்.. அதை திருந்த செய்தால்.. அது தேவன் என்றாலும் விடமாட்டேன்..!’என்ற எம்.ஜி.ஆரின் நான் ஆணையிட்டால் என்ற பாடலில் உள்ள வரிகள் தான் இந்த கட்டுரை ஆரம்பிப்பதற்கு முன் ஞாபகத்திற்கு வருகிறது.
தவறு ஏற்படுவது மனித வாழ்க்கையில் ஒரு சாதாரணம்தான். அதுவே அந்த தவறை தனது ஆசைக்காகவும், பதவிக்காகவும், பொருளுக்காகவும், ஏக்கத்திற்காகவும், குற்ற உணர்ச்சிக்காகவும் தெரிந்தே செய்யும் தவறுகள் தான் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கிறது.
இந்தக் கட்டுரையில் ரோமானியர்கள் காலத்தில் தப்பு செய்த நபர்களுக்கு கொடுக்கப்பட்ட மிக மோசமான தண்டனைகளை பற்றி பார்ப்போம்..! படிப்பதற்கு உங்களின் மனதினை வலிமையாக்கிக் கொள்ளும்..!
ரோமின் மிக மோசமான தண்டனைகள்..!
1.PARRICIDE PUNISHMENT:
ஒருவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களில் அம்மா,அப்பா,தம்பி அண்ணன், அக்கா போன்ற யாரையாவது ஏதாவது ஒரு காரணத்தினால் கொன்று விட்டால்.
அந்த குற்றவாளியை ரோமானியர்கள் பாரிசைட் (Paaricide)என்று சொல்வார்கள். இந்த தண்டனையில் குற்றவாளியை ஒரு பெரிய சாக்கிற்குள் வைத்து, அதில் கோழி,நரி,பாம்பு, குரங்கு,நாய் போன்ற விலங்குகளை உள்ளே போட்டு அந்த சாக்கை துணியால் கட்டி, குளத்திலோ,கிணற்றிலோ, அந்த சாக்கை போட்டு விடுவார்கள்.
அந்த குற்றவாளிக்கு அந்த சாக்கில் இருக்கும் விலங்குகளால் வேதனையும், வலிகளும் ஏற்படும். தண்ணீரில் போட்ட பிறகு நரக வேதனையை அனுபவித்த பின் மூச்சு முட்டி இறுதியில் அந்த குற்றவாளி உயிரிழந்து விடுவார்.
2.TREASON PUNISHMENT:
அரசின் ரகசியங்களை வெளியே சொல்லுதல், மதிப்பளிக்காமல் இருத்தல் போன்ற அரசுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக வழங்கப்படும் தண்டனையே இந்த ட்ரிஷன் தண்டனை ஆகும்.
இந்த தண்டனையில் பொதுமக்கள் மத்தியிலோ அல்லது தனி அறையிலோ குற்றவாளிகள் கடுமையாக தாக்கப்படுவார்கள். குற்றவாளியை கம்பால் அடித்தும் கல்லால் அடித்தும் காயப்படுத்துவார்கள். ஒரு கட்டத்தில் இந்த தண்டனையால் குற்றவாளி உயிரிழக்க நேரிடும். சில நேரங்களில் குற்றவாளிகளை காட்டு விலங்குகளுக்கு இரையாக விட்டு விடுவார்கள்.
இந்த வகை குற்றவாளிகள் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாவார்கள்.
3. POISONERS,SORCERERS AND CHRISTIAN WOMAN.
பொய் பேசுபவர்கள், தவறான முறையில் மந்திரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்படுவது, மக்களின் மனதை திசை திருப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் மத்தியில் வைத்து கொடூரமாக சித்தரவதை படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு சாட்டையடி, கல்லடி, கம்பால் அடிப்பது என்ற சித்திரவதை கொடுக்கப்படும்.
அதேபோல் கிறிஸ்தவ மதத்தை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமோ அல்லது அறிவிப்போ செய்தால் அவர்களை காட்டு விலங்குகளுக்கு இரையாக்கி விடுவார்கள்.
4. BREAKING THE OATH OF CELABACY:
ரோமானியர்களில் சில குறிப்பிட்ட பெண்கள் ரோமாவின் புனித நெருப்பை பாதுகாக்கும் பெண் துறவிகளாக இருப்பார்கள். இந்த துறவி வாழ்க்கையானது கட்டாயமாக 30 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதே அங்குள்ள கடுமையான சட்டம் ஆகும். இதற்கிடையில் அந்த துறவிப் பெண் கற்பை இழந்து விட்டால் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்தப் பெண்ணை நகரத்தை விட்டுத் தள்ளி, ஒரு சிறிய இருட்டான அறையில் அடைத்து தேவைக்கும் குறைவான உணவுகளை மட்டும் கொடுத்து, வெளிச்சத்திற்கு ஒரு லாந்தர் விளக்குகளை வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். சில நாள்களுக்குப் பின் அந்தப் பெண் இறந்த பிறகு குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.
அந்தப் பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட ஆணை நேரடியாக தூக்கில் போட்டோ, மக்கள் முன்னிலையில் அடித்தோ கொலை செய்து விடுவார்கள்.
பாத்தீங்களாங்க எவ்வளவு கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்குன்னு.. இப்ப நீங்க சொல்லுங்க நம்ம நாட்டுல குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனைகள் கொடுக்கலாம்ன்னு..!