

வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ அவர் பழக்க வழக்கம் வைத்திருக்கும் நபர் மிகவும் நேர்மையானவராகவும் மற்றர் நலத்தில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். தன்னலமே முக்கியம், பிறர் நலத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாத எட்டு வகையை சேர்ந்த மனிதர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துபவரை, அதாவது டீம் லீடராக இருக்கும் ஒருவர், அந்த டீமில் இருப்பவர் கொடுத்த ஐடியா காரணமாக டீம் வெற்றி பெற்றாலும், அது தன்னுடையது எனக் கூறுவார். அதேசமயம் டீம் தோல்வியடைந்தால் ஐடியா கொடுத்தவரையே குற்றம் சாட்டி கேள்வி கேட்பார். தான் மட்டுமே மிகப் பெரியவன் என்ற எண்ணம் கொண்டு பாராட்டை மட்டுமே விரும்பும் குணம் உள்ளவரை நம்பக் கூடாது.
2. உற்ற தோழனாக பழகும் ஒருவர், நம்முடைய ரகசியங்களை தெரிந்துகொண்டு அடுத்தவரிடம் நம்மைப் பற்றி கூறி நல்ல பெயர் சம்பாதிப்பார். அதே நமக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் 'சாரி என்னால் இது முடியாது’ என சொல்லி விடுவார். தன்னுடைய தேவைக்கு அடுத்தவர்களை கருவியாகப் பயன்படுத்தும் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
3. அடுத்தவர்களை மிகவும் கவரும் விதமாகப் பேசி அதன் மூலம் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வர். இவர்கள் நம்மைப் பற்றி துளி கூட மனசாட்சியே இல்லாமல் சிந்திக்க மாட்டார்கள் என்பதால் அவர்களை ஹிட் லிஸ்டிலேயே வைக்க வேண்டும்.
4. கணவன், மனைவியோ அல்லது நண்பர்களோ இருவரில் ஒருவர் தப்பு செய்ததை மற்றவர் கண்டுபிடித்து விட்டால், அதிலிருந்து விடுபட குற்றம் சுமத்தியவர் மீது குற்றம் சுமத்துவது, ‘நான் அவ்வாறு செய்யவில்லை. சிறிய விஷயத்தைக் கூட பெரிதுபடுத்துகிறாய். உனது பார்வையே சரியில்லை. எல்லாம் உன்னால்தான்’ என நம்முடைய நம்பிக்கையை குலைக்கும் விதமாக கூறுபவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஒருவர் நம் மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்து நமக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி பரிசளிப்பார். இதன் மூலம் நம்மை அவருடைய அன்பு வலையில் விழ வைத்து அதன் மூலம் நம்மை அடிமையாக்க முயற்சி நடக்கும். இத்தகைய அதிகார குணம் உள்ளவர்களிடம் குற்ற உணர்ச்சியே இல்லாமல் வெளியே வந்து விட வேண்டும்.
6. நம்மிடம் பழகி சிறிய உதவியை செய்து விட்டு அதற்கு பதிலாக பெரிய உதவியை கேட்பார். அப்போது நம்மால் செய்ய முடியாது எனக் கூறும்போது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நம்மையே குற்ற உணர்ச்சி நிலைக்குத் தள்ளி விடுவார். இத்தகையவரிடம் ‘சாரி, நோ’ சொல்லத் தயங்கக் கூடாது.
7. நடக்காததைக் கூட நடக்கும் என பயமுறுத்துவது, உதாரணமாக ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது, ‘இங்கிருந்து சென்றால் வேறு எங்கும் உனக்கு வேலை கிடைக்காது. என்னை விட்டுச் சென்றால் உனக்கு வாழ்க்கையே இல்லாமல் போய் விடும்’ என பயமுறுத்துபவர்களிடம் பயமின்றி பதுங்கி விட வேண்டும்.
8. நாம் ஒருவரிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவர், ‘என்னை யாருமே புரிந்து கொள்வதில்லை. இதனால் நான் எவ்வளவு வருத்தப்படுகிறேன்’ எனக் கூறி வருத்தப்பட ஆரம்பிப்பார். கடைசியில் நாமே சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் இவர்களிடம் சமாதானமே இல்லாமல் உங்கள் கருத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது.