

உலக இசை வரலாற்றில் சில கருவிகள் காலத்தின் அடையாளமாகவும், சில கருவிகள் புதிய யுகத்தின் சின்னமாகவும் விளங்குகின்றன. ரஷ்யாவின் பாரம்பரிய இசைக்கருவியான பாலலைக்கா நூற்றாண்டுகளாக மக்களின் உணர்வுகளை இசையாக வெளிப்படுத்தி வருகிறது. அதே சமயம், சுவிட்சர்லாந்தில் உருவான ஹாங் டிரம் நவீன உலகில் மனஅமைதியைத் தரும் இசைக்கருவியாகப் புகழ்பெற்றுள்ளது. ஒன்று மக்கள் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு; மற்றொன்று மனித மனத்தின் அமைதிக்கான தேடல்.
1. பாலலைக்காவின் தோற்றமும் வரலாறும் (Balalaika):
பாலலைக்கா கருவி 17-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் தோன்றியது. ஆரம்பத்தில் இது கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் எளிய நாட்டுப்புற இசைக்கருவி ஆக இருந்தது. பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் Vasily Andreyev என்ற இசைக்கலைஞர் இந்த கருவியை மேம்படுத்தி, மேடை இசைக்கருவியாக மாற்றினார். அதன்பின் பாலலைக்கா ரஷ்யாவின் தேசிய இசைக்கருவி என அங்கீகரிக்கப்பட்டது.
பாலலைக்காவின் வடிவமைப்பு: பாலலைக்கா கருவியின் முக்கிய அம்சங்கள் முக்கோண வடிவ உடல், மூன்று நார்கள், மரத்தால் செய்யப்பட்ட உடல், நீளமான கைப்பிடி (neck). விரல்களாலும் அல்லது சிறிய பிக் (pick) மூலமும் வாசிக்கப்படுகிறது. இதன் ஒலி மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும். இதன் எடை குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் வாசிப்பதற்கு வசதியாக இருக்கும்.
பயன்பாடு மற்றும் முக்கியத்துவம்: பாலலைக்கா ரஷ்ய நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், கலாச்சார விழாக்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், இவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளாவிய புகழ்: இன்று பாலலைக்கா ரஷ்யாவைத் தாண்டி அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இசைக்கலைஞர்களால் வாசிக்கப் படுகிறது. இது உலக இசைக்கருவிகளில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது.
ஹாங் டிரம் என்பது கைகளால் மெதுவாகத் தட்டிப் வாசிக்கும் ஒரு நவீன இசைக்கருவி ஆகும். இது உலோகத்தால் செய்யப்பட்ட இரண்டு அரை கோளங்கள் (steel shells) இணைக்கப்பட்ட வடிவில் இருக்கும். 'Hang' என்பது சுவிஸ்–ஜெர்மன் மொழியில் 'கை' என்ற பொருளைக் குறிக்கும்.
ஹாங் டிரம் சுவிட்சர்லாந்தில் 2000 ஆம் ஆண்டு Felix Rohner, Sabina Schärer இவர்களால் PANArt என்ற நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது.
UFO (விண்வெளி தட்டு) போல தோற்றம் மேல் பக்கத்தில் நடுவில் ஒரு பெரிய வட்டம் சுற்றிலும் 7 அல்லது 8 சிறிய ஒலி பகுதிகள், கீழ்பக்கம் ஒரு துளை இருக்கும்.
ஹாங் டிரம் கைகளால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அடிக்கக் கூடாது; மெதுவாகத் தட்ட வேண்டும். விரல்கள், உள்ளங்கை, பக்கவிரல் போன்றவற்றால் ஒலி உருவாக்கப்படுகிறது. இதனால் மென்மையான, தியானம் போல ஒலி வரும்.
ஹாங் டிரத்தின் ஒலி அமைதியானது, கனவு போன்றது, மனதை தளரச் செய்யும், மனஅழுத்தத்தை குறைக்கும் அதனால் இது தியானம், யோகா, சிகிச்சை இசை (Sound Therapy) எனப் பயன்படுகிறது.
இந்த கருவி மிகச் சிறிய மில்லிமீட்டர் அளவில் உலோகத்தை அழுத்தி வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடமும் குறிப்பிட்ட 'சுரம்' (note) கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு ஹாங் டிரமும் அழகான தோற்றம், மனதை கவரும் ஒலி வாசிக்க எளிது, குழந்தை முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம்.
பாலலைக்காவின் உயிர்ப்பான நாட்டுப்புற சுரங்களும், ஹாங் டிரத்தின் மென்மையான தியான ஒலியும் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவை போல இருந்தாலும், இரண்டும் மனித மனதைத் தொடும் ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்றன. ஒன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது; மற்றொன்று அமைதியும் தியானமும் தருகிறது. இவ்விரண்டும் இணைந்து, இசை என்பது காலத்தையும் எல்லைகளையும் தாண்டி மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி என்பதைக் நினைவூட்டுகின்றன.