சிலம்பம் (Silambam) - தமிழ் மரபு கலை (Martial Art) - வரலாறும் வடிவங்களும்!

Silambam
Silambam

- மரிய சாரா

சிலம்பம்  என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஒரு யுத்தக் கலை (martial art) ஆகும். உடல் திறன், மன வலிமை, மற்றும் யுத்த திறன்களை வளர்க்கும் ஒரு பண்டைய கலை வடிவம் தான் இது. இது வழக்கில் 'கம்பு சுற்றுதல்' என்றும் அழைக்கப்படுகிறது. சிலம்பம் என்பது, கையில் வைத்திருக்கும் நீண்ட கம்பை (சிலம்பு) சுழற்றி, தாக்குதல் மற்றும் தற்காப்பு செய்யும் ஒரு கலையாகும்.

சிலம் என்றால் மலை, மற்றும் பாம் (palm) என்பது மூங்கிலின் சுருக்கமான வடிவம் என்றும் பொருள். 'மலையில் இருந்து மூங்கில்' என்பது தான் இதன் பொருளாகும். சிலம்பத்தில் பயன்படுத்தப்படும் குச்சி சுமார் 1.68 மீ நீளமும், ஒன்றரை பவுண்டு எடையும் கொண்டது. சிலம்பம் நடைமுறையில் உலோக சாட்டைகள், ஈட்டிகள் மற்றும் மான் கொம்புகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதும் அடங்கும்.

சிலம்பத்தின் வரலாறு:

சங்க இலக்கியங்களான மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றில் சிலம்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதிலிருந்து, சிலம்பம் கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், மற்றும் பாண்டியர்கள் போன்ற தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சிலம்பம் வளர்ந்து, போர்களில் முக்கிய பங்கு வகித்தது.

காலனித்துவ காலத்தில் சிலம்பம் பயிற்சி சற்று குறைந்தாலும், சுதந்திரத்திற்குப் பின்னர் மீண்டும் புத்துணர்வு பெற்றது. இன்று, தமிழ்நாட்டில் பல்வேறு சிலம்பம் பாணிகளை கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கி.பி. 1785 – ல் ஆங்கிலேயர், திருநெல்வேலிச் சீமையில் வரிவசூலிக்கும் உரிமையை ஆர்க்காட்டு நவாப்பிடம் இருந்து பெற்றனர். அதுமுதல் தென்மாவட்டங்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினுள் வந்தன. சிலம்பத்தில் மாவீரர்களான கட்டபொம்மன், ஊமைத்துரை, மதுரைப்பாண்டி, பூலித்தேவன் போன்றவர்கள் ஆங்கிலேயரின் இராணுவ வலிமையால் அடக்கப்பட்டுத் தூக்கில் இடப்பட்டனர்.

இவர்களையெல்லாம் தூக்கிலிட்டதுடன் திருப்தி அடையாமல், மீண்டும் கிளர்ச்சி ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆங்கிலேயர் தொடங்கினர். நெல்லைச் சீமையில் பிரம்மதேசம், கங்கைகொண்டான், சங்கர நயினார் கோவில், ஆழ்வார் திருநகரி, களக்காடு பகுதிகளில் மொத்தம் இருபத்தெட்டு கோட்டங்கள் இடித்து நொறுக்கப்பட்டன.

விடுதலைக்குப்பின்னர் முன்னைய நன்னிலைக்கு சிலம்பம் எனும் நம் பாரம்பரிய கலை இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. மீட்டெடுக்க இன்றுவரை பல்வேறு வகையில் முயன்று கொண்டு தான் இருக்கிறோம். 

இதையும் படியுங்கள்:
திருச்சி மலைக் கோட்டையின் பெருமை தெரியுமா?
Silambam

சிலம்பத்தின் வடிவங்கள்:

வாரிசை சிலம்பம்: இது அடிப்படை தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகளை கற்றுத்தரும் பாரம்பரிய பாணி.

மெய் சிலம்பம்: இது உடல் அசைவுகளில் கவனம் செலுத்தும் பாணி.

ஆயுத சிலம்பம்: வேல், வாள் (sword), கம்பு போன்ற பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் பாணி.

குத்து சிலம்பம்: இது குத்துச்சண்டை (boxing) போன்ற தாக்குதல் உத்திகளை கையாளும் பாணி.

சிலம்பம் பயிற்சியின் நன்மைகள்:

சிலம்பப் பயிற்சி மூலம் உடலின் வளைவுத்தன்மை, வேகம், பலம், மற்றும் ஒருங்கிணைப்புத் திறன் அதிகரிக்கிறது. மேலும், கவனம், ஒழுக்கம், மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவை வளரும். சிலம்பம் தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகளை கற்றுத்தருவதால், தன்னைக் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. இந்த பயிற்சி மூலம் தன்னம்பிக்கை (self-confidence) அதிகரிக்கும்.

சிலம்பம் கற்க விரும்புபவர்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியரிடம் பயிற்சி பெறுவது அவசியம். தமிழ்நாட்டில் பல சிலம்பம் பயிற்சி நிலையங்கள் உள்ளன. தற்போது, அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com