செஃப் தொப்பியின் பின்னணியில் இவ்வளவு விஷயங்களா!

Chef Hat
Chef Hat
Published on

உயர்தர ஹோட்டல்களில் இருக்கும் சமையல்காரர்கள் தலையில் வெள்ளை நிற தொப்பியுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த உயரமான, வெள்ளை நிற சமையல்காரரின் தொப்பி, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. எட்டாம் ஹென்றி மன்னர் தன் உணவில் முடியைக் கண்ட பிறகு, அந்த சமையல்காரரின் தலையை துண்டித்ததாகக் கூறப்படுகிறது, எனவே அவருக்குப் பிறகு அனைத்து சமையல்காரர்களும் சமைக்கும் போது தொப்பி அணிய உத்தரவிடப்பட்டனர். அதன் பின்னர், சமையல்காரரின் தலைமுடி உணவில் விழுவதையோ அல்லது உபகரணங்களில் சிக்கிக் கொள்வதையோ தடுக்கவே தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

ஒரு சமையல்காரரின் தொப்பி அதிகாரப்பூர்வமாக 'டோக்' என்று அழைக்கப்படுகிறது. இது தொப்பிக்கான அரபு வார்த்தையிலிருந்து வந்தது . 1800களில் பிரான்சில், உயரமான, மடிப்புத் தொப்பி 'டோக் பிளாஞ்ச்' என்று அழைக்கப்பட்டது. அதாவது வெள்ளைத் தொப்பி. அது வெள்ளையாக இருக்க வேண்டும் என்று யார் பரிந்துரைத்தார்கள் என்பது குறித்து மாறுபட்ட கதைகள் உள்ளன. ஆனால் வெள்ளை என்பது தூய்மை மற்றும் சுகாதாரத்தைக் குறிப்பதால் அனைவரும் இந்நிறத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஒரு நல்ல சமையல்காரரின் வெளிப்படையாக தெரியக்கூடிய முக்கிய குணங்கள் இரண்டு.

ஒன்று 'ப்ளீட்ஸ்'. தொப்பியில் உள்ள மடிப்புகள். அவை ஸ்டைலாகக் காட்டுவதற்காக மட்டுமல்ல, அதுவும் ஒரு அம்சம்தான். 1800களில் பிரான்சில், ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு மடிப்பும் சமையல்காரரால் தேர்ச்சி பெற்ற ஒரு செய்முறையைக் குறிப்பதாகக் கூறப்பட்டது. எனவே மடிப்புகள் அதிகமாக இருந்தால், சமையல்காரர் மிகவும் திறமையானவர் என்று நம்புகின்றனர். பொதுவாக திறமையான சமையல்காரரின் தொப்பியில் 100 மடிப்புகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாள் விழுங்கும் கலை... சர்வதேச தினமாக மாறிய கதை!
Chef Hat

தொப்பி மடிப்புகள் முட்டை அல்லது மாட்டிறைச்சி போன்ற ஒற்றை மூலப்பொருளைப் பயன்படுத்துவதில் இருக்கும் நிபுணத்துவத்தின் அளவைக் குறிக்கின்றன. நூறு மடிப்புகளைக் கொண்ட தொப்பி அணியும் ஒரு சமையல்காரர் ஒரு முட்டையைத் தயாரிக்க அல்லது மாட்டிறைச்சியைப் பரிமாற நூறு வழிகளை அறிந்திருக்கலாம் என்று அர்த்தம்! இன்று ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், அதிகமான மடிப்புகள் நவீன சமையலறைகளில் உயர்ந்த இடத்தைக் குறிக்கின்றன.

அடுத்து, சமையல்காரர் தொப்பியின் உயரமும் ஒரு குறியீடாகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சில் ஒரு பிரபல சமையல்காரர், அன்டோனின் கேர்ம், தலைமை சமையல்காரர் என்ற தனது நிலையைக் குறிக்க, அட்டைப் பலகையால் தாங்கப்பட்ட 45 செ.மீ உயரமுள்ள ஒரு தொப்பியை அணிந்திருந்தார். இந்த உயரம் மூப்புத்தன்மையை மட்டுமல்ல, நிபுணத்துவத்தையும் குறிக்கிறது. நவீன சமையல்காரர்களின் தொப்பிகள் 20 செ.மீ முதல் 30 செ.மீ வரை நீளமுள்ளதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கிட்டூர் ராணி சென்னம்மா - கர்நாடகாவின் நாட்டுப்புற கதாநாயகி!
Chef Hat

செஃப்களின் அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்றவாறு தான் தொப்பி வழங்கப்படுகிறது. அந்த வகையில் உயரமான தொப்பி அணிந்து இருக்கும் செஃப் அதிக திறமை வாய்ந்த ஒருவர் என்பதை உணர்த்துகிறது.

தற்போது சமையல் அறை சூழல் கருதி, உயரம் குறைந்த தொப்பிகள் முதல் பல்வேறு விதமான தொப்பிகள் வரை அணியப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com