உலகப் பதிவேட்டில் இடம்பிடித்த இலங்கையின் பிரம்மாண்டமான கலை மற்றும் சமூக விழிப்புணர்வுப் புரட்சி!

இலங்கையின் 2 கின்னஸ் சாதனைகள்: ஆட்டிசம் விழிப்புணர்வும் 5000 பேரின் பரதநாட்டியமும்!
கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,
கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,AI Image
Updated on

ணர்வு பலகை (Sensory Board / Activity Board) என்பது குழந்தைகளின் தொடு உணர்வு, கண்பார்வை, மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பு (Fine motor skills) ஆகியவற்றை மேம்படுத்த உதவும் ஒரு ஊடாடும் விளையாட்டுப் பலகை. உலகின் மிக நீளமான தொடு உணர்வுப் பலகை (Sensory Board) கின்னஸ் சாதனைகள் இலங்கையில் உள்ள 'மெராக் 2026' (Meraki 2026) அமைப்பால் நிகழ்த்தப்பட்டது.

ஆட்டிசம் (Autism) விழிப்புணர்வை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பலகை 60 மீட்டர் நீளத்துடன், நேர்த்தியான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தொடு உணர்வுப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆட்டிசம் (Autism) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இலங்கை முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த பலகையை வடிவமைத்துள்ளனர்.

ஆட்டிசம் (Autism) விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பலகை, உலகிலேயே மிக நீளமான உணர்வுப் பலகை (Longest Sensory Board) என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த தொடுவுணர்வு பலகை சுமார் 60 மீட்டர் நீளமும், (196 அடி 10 அங்குலம்) 260 தனித்தனி பேனல்களையும் கொண்டுள்ளது. 345 வித்தியாசமான பொருட்களையும் கொண்டுள்ளது. இது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இயற்கை மூலப்பொருட்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

'தி ட்ரீ ஹவுஸ் இன்டர்நேஷனல்' (The Tree House International இது இலங்கையின் ஒரே ஆட்டிசம் குறைபாடு குழந்தை களுக்கான சிறப்பு பள்ளி மற்றும் 'மெராக்' (Merak) அமைப்புகள் இணைந்து இதை உருவாக்கின. இதன் நோக்கம் நரம்பியல் பன்முகத்தன்மை (Neurodiversity) மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை உலகிற்கு உணர்த்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டது.

உணர் திறன் பலகையின் மேற்பரப்பில் ஜிப்புகள் (Zippers), பொத்தான்கள் மற்றும் மறுபயன்பாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, தொடு உணர்வு சார்ந்த அனுபவத்தை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் வியக்கவைக்கும் சாதனைகள்!
கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,

இலங்கை முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன், ஆட்டிசம் விழிப்புணர்வு என்ற ஒரே செய்தியுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட, சாதனை படைத்த மெராக் பாணி உலகின் நீண்ட உணர்திறன் பலகைகள் மே 17, 2026 சனிக்கிழமை காலை தொடங்கி இலங்கை BMICH-ல் (பண்டாரநாயக்கா நினைவு அரங்கம்) பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. மே 20 மாலை வரை உணர்திறன் பலகைகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

மே 17 அன்று பிற்பகல் 3 மணிக்கு நரம்பியல் பன்முகத்தன்மை குறித்த நிபுணர் குழு விவாதத்தையும், உணர்வுப் பலகை உருவாக்கும் பட்டறையும் நடைபெற்றது. இதன்படி ஒவ்வொரு உணர்வுப் பலகையும் ஒவ்வொரு வித்தியாசமான கதையைச் சொல்கின்றபடி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,
கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,AI Image

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை:

5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி (Bharatanatyam Dance Lesson) என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.இந்த நிகழ்வு இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி (Sangamam Global Academy) மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா (Samgamizh Liya) ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு காலி முகத்திடலில் ஜூன் 14 2026 அன்று நடைபெற்ற இந்தநிகழ்வில் இலங்கை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று இந்திய பாரம்பரிய நடனக் கலையையும் கலாசார மரபையும் கொண்டாடினர்.

பரதநாட்டியத்தின் தொன்மையான பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு, நாடுகளுக் கிடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்த கலைஞர்கள், குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடன அசைவுகளை நிகழ்த்தி உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

5000- மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் கூடிய நிகழ்ச்சிக்குப் பின்னர் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு, சாதனைக்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா, கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் சார்பில் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
புத்தகம் படிக்கும் பழக்கம் எப்படி உங்களை சிறந்த மனிதராக மாற்றும்?
கின்னஸ் சாதனைகள் - Sri Lanka Guinness records,

இந்த சாதனை, உலக பரதநாட்டிய சமூகத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க நடன வடிவங்களில் ஒன்றான பரதநாட்டியத்தின் நிலைத்த புகழையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தொகுப்பின் மூலம் சர்வதேச அளவில் கவனம்பெற்ற இரு மாபெரும் உலக சாதனைகளின் பின்னணியையும், நரம்பியல் பன்முகத்தன்மை கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய கலை எவ்வாறு உலக அரங்கில் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது என்ற அரிய தகவல்களையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com