புத்தகம் படிக்கும் பழக்கம் எப்படி உங்களை சிறந்த மனிதராக மாற்றும்?

பாரதிராஜா அவர்களின் அனுபவத்தின் வழியே வாசிக்கும் பழக்கம் எவ்வாறு ஒரு மனிதனின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, சமுதாயப் பார்வையை மாற்றுகிறது என்பதை அறியுங்கள்.
புத்தக வாசிப்பு | A Boy reading a book
புத்தக வாசிப்பு | A Boy reading a bookImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

புத்தக பிரியர்கள் பல வகைப்படுவார்கள். அந்த வகையில் நான் கண்ட, கேள்விப்பட்ட, கண்டு உணர்ந்த புத்தகத்தை வாசித்து அதன்மூலம் வாழ்க்கையில் நிலைநிறுத்திக்கொண்ட வாசகர்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

புத்தக வாசகர்கள் என்பவர்கள் புத்தகங்களைச் சேமிப்பவர்கள் அல்ல....

அதாவது பலருக்கு பல வகையான பழக்கங்கள் உண்டு. இதை நாம் அறிவோம். அதுபோல புத்தகங்களை பெற்று பொருள் போல் சேமிப்பது என்பது பல பேரிடம் இருக்கத்தான் செய்கிறது.

இது ஒரு சொத்து என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. புத்தகங்களை சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் கவனமாக இருப்பவர்கள் அதைப் படிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

அவற்றை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்திருப்பார்கள். எந்த வகையில் முன்னேறி பிறரையும் வழிநடத்த முடியும் என்பது சந்தேகமே.

மேலும், பலர் புத்தகங்களை வாங்கியவுடன் அதில் உள்ள சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்காக படிக்கத் தொடங்குவார்கள்; படிக்கத் தொடங்கியவுடன் அவர்களுக்கு அது பிடித்திருந்தால் தொடர்ந்து படிப்பார்கள்; இல்லையேல் அவற்றை மூடி வைத்துவிட்டு மற்ற வேலையைப் பார்ப்பார்கள்; இந்த வகையில் இவர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

மேலும், சிலர் புத்தகங்களை வாங்குவதற்கு முன் அது தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றனவாக இருக்கிறதா? என்பதை படித்தவரிடம் கேட்டு அறிந்து வாங்குபவர்கள்.

இவர்களிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் இருக்கும்; அதை அவர்கள் பிறரிடம் பகிர்ந்துகொண்டாடுவார்கள்.

சரி இதெல்லாம் இருக்கட்டும்; ஒரு புத்தகம் என்பது நமக்கு முதலில் பிடிக்க வேண்டும்; அவ்வாறு அது நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள்:
மூங்கில் சோல் காலணிகள்: ஷூ துர்நாற்றத்திற்கு இனி குட்பை சொல்லுங்கள்!
புத்தக வாசிப்பு | A Boy reading a book

முதலாவதாக படிப்பதை நாம் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும்.

பிறகு அந்த வழக்கமானது பழக்கமாக மாறவேண்டும்.

பிறகு பழக்கம் நம் பண்பாடாக மாறி, நம்முடைய கல்வியில், கலையில், கலாச்சாரத்தில் ஒன்றி உறவாடி நம்மை வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் படிப்பவர்களுக்கு இருக்க வேண்டாம்.

இயக்குனர்களின் பார்வையில் புத்தக வாசிப்பு தரும் நுணுக்கங்கள்:

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் 'ஒரு நல்ல இயக்குனருக்கான தகுதி என்ன?' என்பது பற்றி கேட்கப்பட்டது!

அதற்கு அவர் சொல்லிய பதிலை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

"இது இயக்குனர் ஆவதற்கான தகுதி என்பதைவிட நம் கவனத்தை எப்படி எல்லாம் நாம் ஒருமுகப்படுத்தி முன்னேறக்கூடிய ஒரு வாய்ப்பாக கருதிக்கொள்ளலாம்.

எந்த ஒரு தொழிலிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமானால் அதற்கு முதலில் நமக்கு தேவை ஒரு ஈடுபாடு. அந்த ஈடுபாடு என்பது படிப்பதில்தான் நமக்கு கிடைக்கும்."

இதைத்தான் ‘பாரதி ராஜா’ தன்னுடைய நேர்காணலில் தான் படித்த சிலாகித்த பல நாவல்களைக் கூறுகிறார்.

அவ்வாறு படிக்கும்போது நம்மிடையே ஒரு கவனம் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

புத்தக வாசிப்பு | a man reading a book
புத்தக வாசிப்பு | a man reading a bookAI Image

அவர் இவ்வாறு கூறுகிறார்:

நம்மைச்சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

அந்தக் கவனித்தல் என்பது நமக்கு சமுதாயத்தில் ஒரு ஈடுபாடு ஏற்படுத்தித் தரும்.

அந்த ஈடுபாடு பிரதிபலிக்கும்போது அது கலையாக உருவெடுக்கும்.

There is no distinction between commercial cinema and art cinema.

Everything is an art.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சுவை பிடிக்கும்.

அதை வகைப்படுத்தி பெருமை கொள்வதோ? அல்லது சிறுமை கொள்வதோ? தேவையற்றது!

ஆனால், நாம் படைக்கும் அந்தக் கலையானது சமுதாயத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல மேன்மையையும் கொண்டுவரக் கூடிய அளவுக்கு இருக்கவேண்டும்.

உங்களை நீங்களே முதலில் கவனித்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய விருப்பம் என்ன என்பது அப்போது புரியும்.

நாம் சராசரியாக பார்க்கின்ற பல விஷயங்கள் நம் கவனக் குவியலால் பல பிரமிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கிறான்- என்றால் 'அவன் எதனால் அப்படி ஆனான்' என்பதை யோசிப்பதுதான் ஒரு கலைஞனுடைய வேலை!

அவனுக்கும் ஒரு கதை இருக்கிறது. எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது.

ஒரு கதையை நாம் ஒரு சமுதாய கதையாக மாற்றும்போது அந்தப் புரிதல் ஆனது சமுதாய ஒருங்கிணைப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

அதனால் நான் எடுக்கும் படங்களில் violence, sex இவை மிகாமல் பார்த்துக்கொள்கிறேன்."

இதையும் படியுங்கள்:
நெதர்லாந்தில் மனிதர்களை விட சைக்கிள்கள் அதிகம் ஏன் தெரியுமா?
புத்தக வாசிப்பு | A Boy reading a book

எந்தெந்த புத்தகங்களை படிப்பது ?

பாரதிராஜா சொல்வதுபோன்று எல்லா புத்தகங்களும் வாசிக்கப்பட வேண்டியதே!

நம்முடைய சுவைக்கு ஏற்ப நாம் புத்தகத்தைப் படித்தால் அதை நாம் உண்மையாக முழுமையாக உணர முடியும்.

புத்தக வாசிப்பில் இப்போது பல வழிகள் உள்ளன...

நாம்...

Ebooks படிக்கலாம்; Podcast வந்து விட்டது; புத்தகங்களைப் பற்றிய வீடியோஸ் இப்பொழுது youtube இல் நிறைவே படித்தவர்கள் பேசுகிறார்கள்.

Instaவில் இப்பொழுது எல்லாம் 'book recommendations ' எல்லாம் அதிகமாக பகிரப்படுகிறது.

என்னைப் பொருத்தவரை புத்தகம் என்பது அச்சு அசலாக, புத்தக வடிவில் நம் கண்முன்னே பார்த்து, பக்கங்களைப் புரட்டி, அந்த வாசத்தை உணர்ந்து, அதனுடைய நின்று, சிலாகித்து, ஒட்டி, உறவாடி பயணப்படுவதுதான்!

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை என்னவென்றால்:-

இதையும் படியுங்கள்:
ஒரு ராணுவ வீரர், ஒரு டிக்கெட் பரிசோதகர், ஒரு ஏழை பெண் - நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
புத்தக வாசிப்பு | A Boy reading a book

நவீன உலகில் புத்தக வாசிப்பு தரும் ஆக்கப்பூர்வமான நன்மைகள்:

படித்தலின்போது நமக்குள்ளே கற்பனையானது மேலோங்கி எழுகிறது. அந்த "திறன்" நம்மைப் பல சமயங்களில் நம்முடைய வாழ்நாள் சோதனைகளிலும், நாம் எதிர்பாராத சிக்கல்களிலும் நமக்கு ஒரு ஆயுதமாக செயல்பட்டு நம்மை விடுவிக்கிறது.

இதை இப்படிச் சொன்னால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்

Reading creates creativity in human beings. This trait if practiced continuously, would set the standard for peaceful living.

It creates solutions for the unexpected problems and unwanted situations.

பொறுமையே பெருமை! அதற்கு தேவை கவனக் கூர்மை!! இவை ஒன்றுகூடி வர படிப்போம்! அறிவார்ந்த சமுதாயம் படைப்போம்!!

இந்தப் பதிவின் மூலம், வெறும் தாள்களாக இருந்த புத்தகங்களை உங்கள் வாழ்வின் வழிகாட்டியாக மாற்றும் நுணுக்கங்களைப் பெறுவீர்கள். அன்றாட வாழ்க்கையில் குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையுடனும், புதிய படைப்பாற்றலுடனும் சவால்களை எதிர்கொள்ளும் மனதிடம் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com