உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் எது தெரியுமா?

Oldest art
Oldest art

வரலாற்றின் முந்தைய காலத்திற்கும் அதாவது ஏறத்தாழ 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் மழையிலும் வெயிலிலும் இன்றும் அழியாமல் உள்ளது என்றால் ஆச்சர்யம்தானே? ஆம்! இந்த ஓவியம் இன்றும் அழியாமல் கலைக்கும் வரலாற்றிற்கும் ஒரு நினைவுச்சின்னமாகவே இருந்து வருகிறது.

வரலாற்றை தோண்டிப் பார்க்கையில் நாளுக்கு நாள் புதிது புதிதான பல விஷயங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த ஓவியம்தான் உலகிலேயே பழமையானது என்று திட்டவட்டமாக உறுதிசெய்து அறிவிப்பதற்குள் மற்றொரு பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்படுகிறது. இன்னும் எவ்வளவோ புதைந்து கிடக்கும் இவ்வுலகில் இதுதான் பழமையானது என்றுத் தீர்மாணிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.

ஆனால் இதுவரை கண்டுபிடித்ததிலேயே இந்த ஓவியம்தான் மிக மிக பழமையான ஓவியமாகும். அதன்பின்னர் இன்று வரை இதைவிடவும் பழமை வாய்ந்த ஓவியத்தை யாருமே கண்டுப்பிடிக்கவில்லை.

Sulawesi cave art
Sulawesi cave art

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சியாளர் இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி என்ற இடத்தில்தான் இந்த ஓவியத்தைக் கண்டுப்பிடித்தார். இது ஒரு பன்றி ஓவியமாகும். பிற்பாடு ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வரையப்பட்ட ஓவியம் என்பது தெரியவந்தது. ஒருவேளை இந்தக் கணிப்பு சரியென்றால் சுலவேசியில் உள்ள 'லீங் டெடொங்கே' குகையில்தான் முற்காலத்தில் உருவக்கலை வரையப்பட்டது என்பது உறுதியாகிவிடும்.

ஏனெனில் வடிவமைப்புகளையும் தனித்துவமான பொம்மை ஓவியங்களையும் வரைந்து வந்தக் காலகட்டத்தில் அந்தத் தீவில் மட்டும்தான் திரும்பும் இடமெல்லாம் உருவக்கலை இருந்தது. குறிப்பாக விலங்குகளின் ஓவியங்கள். அதுவும் இந்த ஓவியங்கள் இப்போது சிறுப்பிள்ளைகள் எப்படி வரையுமோ அதேபோல்தான் வரையப்பட்டிருந்தது.

சுன்னாம்பு குகையான சுலவேசி குகை வரலாற்றுக்கும் முந்தய காலத்திலிருந்து மிகவும் பிரபலமாக விளங்கியது. இங்கு  100க்கும் மேற்பட்ட குகைகள் இருக்கின்றன. அங்கு வரையப்பட்ட பல ஓவியங்கள் இன்று அழிந்துவிட்டது என்றாலும் இந்தப் பன்றி ஓவியம் மட்டும் அழியாமல் தன்னைப் பாதுகாத்து வருகின்றது.

இதையும் படியுங்கள்:
சுராஹி: தமிழர் கலை, பாரம்பரியம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம்!
Oldest art

Pleistocene  என்று சொல்லப்படும் காலத்தில் (அதாவது 2 மில்லியன் முதல் 11 ஆயிரம் வருட காலங்களுக்கு முன்னர்) வாழ்ந்த ஓவியர்கள் அதிகமாக விலங்குகளைத்தான் வரைந்திருக்கிறார்களாம். அதுவும் இயற்கை பிரஷ் மற்றும் ஐந்து விரல்களையும் பயன்படுத்தி வரைந்த இவர்கள் தங்களது ஓவியங்களில் சிவப்பு மற்றும் ஊதா நிறங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த பன்றி குகை ஓவியம் 45 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வரையப்பட்டது என்பதால் Pleistocene காலத்தில் வாழ்ந்த ஓவியர்கள் தான் வரைந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

சுலவேசி பகுதிகளில் அப்போதிலிருந்து இப்போது வரை பன்றி நடமாட்டம் இருந்து வருகிறது. அது அவர்களின் சொந்த ஊராகக் கருதப்படுகிறது. அதேபோல் ஒரு ஆராய்ச்சியில் அந்தக் காலத்தில் பன்றியைதான் அதிகமாக வேட்டையாடி உணவருந்தியிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. அதனை உணர்த்தும் விதமாகத்தான் ஓவியர் ஒருவர் பன்றியை வரைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com