தமிழர் திருமணச் சடங்குகள்: பந்தக்கால் முதல் தாலி வரை... மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்!

tamil-marriage
tamil-marriage
Updated on

நாட்கால் நடல்

இதை பந்தக்கால் நடுவது என்பார்கள். பந்தல்கால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை பூவரசம் மரம் வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் முனை முறியாத மஞ்சள் பன்னிரண்டு மாவிலைகள் பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நடவேண்டிய குழியில் வெள்ளி நாணயம் பூ நவதானியம் இவற்றை போட்டு பந்த கால் நடவேண்டும். சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். பந்தக்கால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி மஞ்சள் குங்குமத்தை மேல் நோக்கி தடவவேண்டும்.

கலப்பரப்பு

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி தரையில் விரித்து மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதல் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி கலம் என்பது பாத்திரம் ஆகும். பாத்திரத்தில் மங்கல பொருட்களை மஞ்சள் கலவை வெற்றிலை பாக்கு தேங்காய் பழங்கள் பூச்சரம் நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.

காப்பு கட்டுதல்

காப்பு என்பது அரண் போன்றது மங்களகரமான சக்தி வாய்ந்த மஞ்சள் உருவாய்ந்த மஞ்சள் கயிற்றைக் காப்பாக கட்டுவது திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு காப்பு கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டி கட்டப்படுவது ஆகும்

வெற்றிலை பாக்கு மாற்றுதல்

மணமகனின் தந்தையும் மணமகனின் தந்தையும் கிழக்க மேற்காக அமர்ந்து நிச்சயதார்த்த வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரை சொல்லி இன்னார் மகனுக்கு இன்னார் மகளை கொடுக்கின்றோம் என இரு வீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலரும் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

சங்கு மோதிரம் எடுத்தலின் ரகசியம்

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரம் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள் அப்போது மணமகன் பொன்னான மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும் மக்களை சங்கினால் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள் நீர் நிறைந்த மண்பானை நீரால் சூழப்பட்ட இந்த பூவுலகை குறிப்பதாகும்.

அரசாணி கால் நடுதல்

மணவறைக்கு முன்னால் அரசாணிகால் நடுதல் என்பது அரச மரத்தின் கிளையையும் பேய்க் கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாக கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். யோகியாய இந்திரனை அதில் எழுந்தருள செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
யாரும் அறியாத இந்தியாவின் பழமையான செங்கற்கோவில்! வியக்க வைக்கும் தகவல்கள்!
tamil-marriage

மணமக்கள் யோகியாக இந்திரனை போல வாழவேண்டும் மற்றும் அரச மரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன பேய் கரும்பு கசப்புடையது நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் விருப்பமான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக் கொண்டு வாழ்க்கையில் சோர்ந்து போய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

தாலி

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைய காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள் பனை ஓலை தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனை பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

logo
Kalki Online
kalkionline.com