
இந்த உகத்திலேயே மக்கள் அதிகமாக குடிக்கக்கூடிய பானம் தண்ணீர். அதற்கு அடுத்தப்படியாக இருப்பது எது தெரியுமா? டீயே தான். இவ்வளவு பிரபலமான டீ உருவானதே ஒரு விபத்து என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கிட்டத்தட்ட ஒரு 4000 வருடத்திற்கு முன்பு சீனாவில் Shen Nung என்பவர் சுடுத்தண்ணீரை சூடு பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு தேயிலை அந்த சுடுத்தண்ணீரில் விழுந்தது. அந்த இலை விழுந்ததும் அதிலிருந்து நல்ல நறுமணம் வரத்தொடங்குகியது. அவரும் அதை எடுத்து குடித்துப் பார்த்திருக்கிறார். அதன் சுவை மிகவும் நன்றாக இருந்திருக்கிறது.
இப்படி தான் டீ பிறந்திருக்கிறது. கொஞ்சம் யோசித்து பாருங்களேன். அவர் அந்த நாளில் சுடுத்தண்ணீர் வைக்காமல் போயிருந்தால், காற்று அடிக்காமல் இருந்திருந்தால், தேயிலை வந்து தண்ணீரில் விழாமல் இருந்திருந்தால் அதை எடுத்து அவர் குடிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு டீயே இருந்திருக்காது. இதை தான் மேஜிக்ன்னு சொல்றோம்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சீனா முழுவதும் டீ பிரபலமாகுது. சீன கலாச்சாரத்தில் டீ தனக்கென்று தனி இடத்தை பிடிக்கிறது. அப்படியே இது புத்த துறவிகள் மூலமாக ஜப்பானுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கிருந்து Portuguese, Dutch மாறிமாறி சென்று கடைசியாக இரோப்பிய மக்களை வந்தடைகிறது. பிரிட்டிஷ் மக்களுக்கு இந்த டீ பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அதில் ஒரு பிரச்னை என்னவென்றால், சீனா மட்டுமே அந்த சமயத்தில் தேயிலைகளை உற்பத்தி செய்துக் கொண்டிருந்தது.
பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள அசாமில் தேயிலை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். நம்முடைய நாட்டில் டீ பிரபலமானதுக்கு முக்கிய காரணம் பிரிட்டீஷ் அதை இங்கே உற்பத்தி செய்ய வைத்தது தான். அதற்கு பிறகு ஸ்ரீலங்கா, ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் டீ பரவியது. Green tea, chai என்று வெவ்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் இந்த டீ குடிக்கப்படுகிறது.
இதன் சுவையையும் தாண்டி இதற்கு சில மருத்துவ குணங்களும் இருக்கிறது. டீ குடிப்பதால் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது, ஸ்ட்ரெஸ்ஸை போக்குகிறது, Immunity boost செய்கிறது. சிலர் டீ நாம் உயிர் வாழும் காலத்தை அதிகரிப்பதாகவும் நம்புகிறார்கள்.