ஆச்சரியம் ஆனால் உண்மை! ஒரு கண்டுப்பிடிப்பு: ஒரே நேரத்தில் இருவர் கண்டுப்பிடித்தால்?

Simultaneous discoveries
Simultaneous discoveries
Published on

Simultaneous discovery என்றொரு விஷயம் இருக்கிறது. அதாவது இரண்டு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால், அவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தை கண்டுப்பிடிப்பார்கள். உதாரணத்திற்கு, இங்கிலாந்தை சேர்ந்த ஐசக் நியூட்டனும், ஜெர்மனியை சேர்ந்த Gottfried Leibniz ஒரே நேரத்தில் Calculus கண்டுப்பிடித்தார்கள். இதுப்போலவே Alexander graham bell மற்றும் Elisa gray ஒரே நாளில் டெலிபோனுக்கான Patentஐ பதிவு செய்தார்கள்.

Light bulb, electro magnetic theory, oxygen discovery, decimal logarithm, theory of evolution எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மக்கள் ஒரே நேரத்தில் கண்டுப்பிடித்திருப்பார்கள். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்துக் கொண்டு ஒரே நேரத்தில் கண்டுப்பிடித்திருப்பார்கள்.  

இதைப்போலவே மைக்கேல் ஜாக்சனும் ஒருமுறை இரவு ஸ்டூடியோவிற்கு போன் செய்து இப்போதே இந்த பாட்டை ரெக்கார்ட் செய்ய வேண்டும். இல்லையென்றால், Prince இதை ரெக்கார்ட் பண்ணிவிடுவான் என்று கூறியிருக்கிறார்.

விவசாயமும் இப்படி தான் உலகத்தில் உள்ள 22 இடத்தில் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். நெருப்பு, பிரமிட் கண்டுப்பிடித்தது வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே சமயத்தில் கண்டுப்பிடித்துள்ளனர். 

இதை கேட்கும் போது Coincidence என்று சொல்லத் தோன்றினாலும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்த Ideas ஒரு விதமான Energy; Light மற்றும் Sound ஆகியவற்றை ஒவ்வொரு

விதமான Frequency இல் நம்மால் உணர முடியும். அதைப்போல தான் ஐடியாக்களை நம்மால் உணர முடியும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மழை உங்களுக்கு பிடிக்குமா? அப்போ 'Petrichor' பற்றி தெரிஞ்சுக்கோங்க!
Simultaneous discoveries

இந்த உலகத்தில் நம்மை சுற்றி நிறைய ஐடியாக்கள் இருக்கின்றன; யாரால் முடிகிறதோ அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அடுத்த முறை உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால் முந்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேறு யாராவது உங்கள் ஐடியாக்களை உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com