Aswathama
Aswathama

அஸ்வத்தாமாவை நேரில் பார்த்த மன்னர்… இது கதையல்ல உண்மை!

Published on

மகாபாரதத்தின் முக்கிய நபரான அஸ்வத்தாமா ஒரு சிரஞ்சீவி என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், இதுவரை அவரைப் பார்த்ததே இல்லை என்று கூறுவார்கள். வரலாற்றை திரும்பிப் பார்த்தால், அவரை ஒரு மன்னர் பார்த்ததற்கான ஆதாரம் உள்ளது.

மகாபாரத போரில் கருவில் இருக்கும் சிசுவை அழித்த அஸ்வத்தாமாவிற்கு கிருஷ்ணர் சாபமிடுவார். அதாவது, அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை பிடுங்கிவிட்டு கலியுகம் முடியும்வரை காயத்துடன் அழைந்துத் திரிவாய் என்று சாபம் விடுவார். இதுவரை அவர் ஆஸ்கார் (Asgarh)என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அழைந்துத் திரிவதாகவும், அங்கு தினமும் ஒருவர் பூ வைத்துச் செல்கிறார், ஆனால், அது யார் என்பது தெரியவில்லை என்றெல்லாம் கூறுவார்கள்.

நேரில் யாருமே அவரைப் பார்த்ததில்லை என்று கூறுகின்றனர். அந்தவகையில், ஒரு மன்னன் பார்த்திருக்கிறார் என்று கூறினால் நம்பமுடிகிறதா?

முகமது கோரிக்கும் ப்ரித்விராஜ் சௌகனுக்கும் இடையே நடைபெற்ற போரைப் பற்றி வரலாற்று புத்தகத்தில் படித்திருப்போம். ஆம்! அந்தப் போருக்கு பின்னர், பிரித்விராஜ் காட்டுக்கு சென்றிருக்கிறார். அந்த காட்டில் அவர் ஒரு பெரிய உருவத்தைப் பார்த்திருக்கிறார். அதாவது நம்மை விட பெரிதாக நெற்றியில் காயத்தோடு இருந்திருக்கிறார். அரசர் அவருக்கு தெரிந்த அனைத்து சிகிச்சையையும் வழங்கியிருக்கிறார். ஆனால், காயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பிரித்விராஜ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நாடு திரும்பினார்.

இதனை நீங்கள் கட்டுக்கதை என்று சொல்லலாம். ஆனால், பிரித்விராஜ் மன்னனின் அரசவை எழுத்தாளர் எழுதிய பிரித்விராஜ் ராசோ என்ற புத்தகத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பமுடியாதவர்கள், அந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நெப்போலியனின் குதிரை 'மாரங்கோ'வின் எலும்புக்கூடு எங்குள்ளது தெரியுமா?
Aswathama

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, அரசருக்கு அவர் யார் என்பதே தெரியாது. அவர் யார் என்பதை கணிக்கக்கூட இல்லை. ஆனால், நெற்றியில் காயத்துடனும் பெரிய மனிதராகவும் இருந்ததால், அது நமக்கு அஸ்வத்தாமாதானே?

logo
Kalki Online
kalkionline.com