Egypt Pyramid
Egypt Pyramid

எகிப்து பிரமிடுகளின் மர்மம்.. வேற்றுகிரக தொடர்பு உண்மையா? 

Published on

Mystery of the Egyptian pyramids: உலக அதிசயங்கள் ஏராளம் அதில் இன்னும் மர்மங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில்  நம்மை வியக்க வைக்கும் சில அதிசயங்களில் ஒன்று தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட  எகிப்தில் இருக்கும் பிரமிடுகள்.

ஒரு தலை முடி கூட உள்ளே செல்லாத வகையில் நெருக்கமாக, உறுதியாக, பாதுகாப்புடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரமிடுகள் யாரால் எப்படி கட்டப்பட்டுள்ளது கட்டப்பட்டிருக்கும் என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.  ஆயிரக்கணக்கான  எகிப்து அடிமைகளால் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டது என்றும் வேற்று கிரக வாசிகளின் தொடர்புகளின் மூலம் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது .இதற்கான போதிய ஆதாரங்கள் எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்  பழங்கால மனிதர்களின் வாழ்க்கை, பண்பாடு, நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஆர்கியாலஜிஸ்ட் (Archaeologist) எனப்படும்  ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வேற்று கிரகத்திற்கும் இந்த பிரமிடுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Egypt Pyramid

1922 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி பிரிட்டிஷை சேர்ந்த சில ஆர்க்கியாலஜிஸ்ட்கள் எகிப்து நோக்கி படையெடுத்தனர். காரணம் அங்கிருக்கும் மம்மிகளை ஆராய்வது தான் அவர்கள் நோக்கம். இரண்டு வருடங்கள் தங்கியும் அவர்கள் கண்களுக்கு ஒரு மம்மி கூட தென்படவில்லை. இனி தேடினால் பணமும் நேரமும் விரயம் என அவர்கள் சோர்வு அடைந்த நேரத்தில் ஒரு சிறுவன் அவர்களுக்காக தண்ணீரை எடுத்து ஓடி வந்தான்.

அப்போது எதிர்பாராமல் அவன் தடுக்கி விழ அவர்கள் ஓடிப் போய் அந்த இடத்தில் பார்த்தால் அந்த இடத்தில் மேடாக ஒரு கட்டிடம் தென்பட்டு உள்ளது இவர்கள் அதைச் சுற்றி உள்ள மண்ணைத் தோண்டி அது என்ன என்று ஆராய்ந்து படிக்கட்டுகள் இருந்த ஒரு சுரங்கப்பாதை வழியே உள்ளே சென்ற அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஏனெனில் அங்கு கொட்டிக் கிடந்தது தங்கமும், வைரமும் போன்ற விலை உயர்ந்த நகைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாமான்கள் என அங்கிருந்ததை பார்த்தபடி வந்தவர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம் அங்கு ஒரு பெட்டியில் இருந்தது ஒரு மம்மி.

அதில் இருந்த மம்மி 19  வயதுடைய ஒரு சிறுவனின் உடல் என்பதைக் கண்டறிந்தனர். தேடியது கிடைத்ததும் விடுவார்களா? அந்த உடல் யாருடையது என ஆராய அது 3300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த இளம்வயது மன்னரான Tutahamun என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையும் படியுங்கள்:
சத்து நிறைந்த ஆப்பம் வகைகள்: பாரம்பரிய சுவையில் புதுமையான மாற்றங்கள்!
Egypt Pyramid

எகிப்தியர்களிடையே ஒரு பாரம்பரிய பழக்கம் இருந்தது அதுதான் இளம் வயதிலேயே சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது அப்படி பிறந்த இந்த மன்னர் மரபுவழி நோயால் பாதிக்கப்பட்டு இளம்வயதிலேயே மறைந்துள்ளார்.
ஒருவர் இறந்து விட்டாலும் அவர்களுக்கு மறு வாழ்வு இருக்கிறது என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. 

அதன்படி மன்னரின் உடலையும் மம்மியாக்கி அவருக்கு தேவையான தங்கம் வைரத்துடன் விளையாடிய பொருட்களையும் சேர்த்து பிரமிடு சுரங்கத்தில் வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களை கவர்ந்த ஒரு விஷயம் அந்த மம்மியிடம் இருந்த இரும்பினால் ஆன ஒரு கத்தி ஏறக்குறைய 3200 வருடங்களுக்கு முன் இரும்பு என்பது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் அதைப்பற்றி அவர்கள் மேலும் ஆராய்ந்தார்கள். 

அனேகமாக அந்த மன்னரின் தாத்தாவுக்கு வந்த கல்யாண பரிசாக கூட  இருக்கலாம் என்று கருதிய ஆராய்ச்சியாளர்கள் இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் கூட அங்கு இருந்ததாகவும் அந்நேரத்தில் இரும்பு மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக கருதப்பட்டதாலேயே அவற்றையும் மம்மிகளின் உடன் புதைத்துள்ளதும் அறிந்து கொண்டனர். 

logo
Kalki Online
kalkionline.com