

கந்தசாமிக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் கடவுள் வந்தார். அந்த கனவில் கடவுள் கந்தசாமிக்கு "என்ன வேண்டும் - கல்வியா? செல்வமா? வீரமா?" என்றார்.
'சரஸ்வதி சபதம்' பாடலை எழுதிய கண்ணதாசன் தான் கடவுள் உருவத்தில் வருவதாக நினைத்தான். அப்போது அவனுக்கு ஒரு புதுக்கவிதை தோன்றியது.
"வறுமையால் படிப்பை நிறுத்திவிட்டனர்.
எதிர்வீட்டு லட்சுமியும் சரஸ்வதியும்."
இப்போது கடவுள் மறைந்து கண்ணதாசன் வந்தார். உடனே கந்தசாமி, கண்ணதாசனிடம், "கவிஞரே! எனக்கு ஒரு ஆலோசனை சொல்லும்! நீ கடவுளுக்கே கட்டளை இட்டவன்; அந்த கடவுளே இப்போது என்னிடம் வந்து இவ்வாறு கேட்கிறார்; இந்த சந்தர்ப்பத்தை நான் நழுவ விட்டால் நான் வாழ்க்கையை வாழ தெரியாதவன் ஆவேன்! என் செய்வது!?" என்று கோட்டார்.
"சபாஷ்! உன் புத்தியை பாராட்டுகிறேன்; ஆனால் ஒன்று, வரம் பெற்ற பிறகு என்னை மறந்து விடு" என்றார் கவிஞர்.
"அது எப்படி கவிஞரே? கவிஞர் என்றால் கண்ணதாசன் என்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும். உனக்கு மரணம் இல்லை என்பதை பாட்டிலும் பாடினாய். அதன் படி பல சங்க தமிழையும், அகநானூறு, புறநானூறு வாழ்வில் தந்துவங்களையும் பாடல்களாக எழுதி என் போன்ற பாமர மக்களையும் உள்ளத்தால் கவர்ந்த கள்வன் நீ அல்லவோ? எப்படி உன்னை மறப்பது?" என்று கேட்டார்.
உடனே கவிஞர் "அது சரி, கடவுள் ரொம்ப நேரம் வெயிட் பண்ண மாட்டார் - உடனே இவ்வாறு கேட்டு விடு! அதாவது, ஒவ்வொரு பிரதி திங்களும் எனக்கு ஒரு நாளாக கழிய வேண்டும்!" என்று ஆலோசனை கூறினார்.
கந்தசாமிக்கு பொறுக்கவில்லை. "என்ன சொல்கிறீர்கள்? சுத்த தமிழில் பேசினால் அவர் (கடவுள்)குழும்பி விடுவார்? வரம் கிடைக்க தாமதம் ஆகும்!" என்றார் கந்தசாமி.
கவிஞரும், "ஆகட்டும். நீ, ஒவ்வொரு பிரதி திங்களும் எனக்கு ஒரு நாளாக கழிய வேண்டும்! என்று கேட்டால், ஒவ்வொரு திங்கள் முடிய மற்றவர்களுக்கு 'ஏழு' நாட்கள் ஆகும் போது உனக்கு ஒரு நாளாக கணக்கிடப்பட்டு பெரு வாழ்வு வாழலாம்." என்று சொன்னார்.
அதை கேட்ட கந்தசாமி "அய்யோ! அது கொடுமையிலும் கொடுமை! என் பேரன்கள், பேத்திகள் வளர்ந்து என்னை தாத்தா என்று கூப்பிடுவதற்கு பதிலாக நண்பா என்றும் , Bro என்றும் அழைப்பார்கள். அதற்கு நான் இயற்கையாக வாழ்ந்து மடிவதே மேல் என்றான்!"
"ஆகா! இதைத் தான் கடவுளும் எதிர்பார்த்து இருப்பார்" என்று சொல்லி மறைந்தார் கவிஞர்.
கந்தசாமிக்கு இப்போது புரிந்தது நாம் வாழ்வது AI உலகம். இதில் கண்ணால் பார்ப்பதும் பொய்! காதல் கேட்பதும் பொய் ! தீர விசாரனை செய்தாலும் கிடைப்பது பொய்யாக தான் இருக்கும். ஆக, 'சிவனே என்று சர்வ காலமும் காலத்தை கணக்கிடாமல், கடமையை ஆற்றுவோம்' என்று கந்தசாமி உணர்ந்தான். கனவு கலைந்தது; கவலைகள் மறைந்தன.
கண்ணதாசனுக்கு நன்றி!