பைன் மரம் வளர்ந்துவரும் 'கும்மகிவி'! எங்கே இருக்கிறது?

Kummakivi rock
Kummakivi rock
Published on

Krishna's Butterball (Mahabalipuram) தெரியும். கும்மகிவி தெரியுமா?

கும்மகிவி என்பதற்கு பின்னிஷ் மொழியில், 'விசித்திரமான கல்' என்று பொருள். பின்லாந்தில் தெற்குக் கரோலியாவிலிருக்கும் பியூமாலாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள ருக்கோலோகாதி நகராட்சியின் மேற்குப் பகுதியிலுள்ள ஒரு காட்டில் கும்மகிவி எனும் ஒரு பெரிய சம நிலைப் பாறை அமைந்திருக்கிறது. 7 மீட்டர் நீளமான ஒரு பாறை, நீளமான மற்றொரு பாறையின் மேற்பரப்பில் மிகச் சிறிய இடத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறது.

இப்பாறையினைப் பார்க்கும் போது, உருண்டு கீழே விழுந்து விடுமோ, அதனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை தோற்றுவித்தாலும், அப்பாறை அவ்விடத்தை விட்டுச் சிறிது கூட நகர்த்த முடியாத நிலையிலேயே இருக்கிறது. அன்றைய காலத்திலும் அப்பாறையை மக்களால் நகர்த்த இயலவில்லை. எனவே, அம்மக்கள் அப்பாறை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அம்மக்களை நினைக்க வைத்தது. பின்னிஷ் நாட்டுப்புறக் கதைகளில் அப்பாறையின் நிலையை அசுரர்கள் அல்லது பூதங்கள் அப்படி நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் அசுரர்கள் அல்லது பூதங்கள் பாறைக்கு பாதுகாப்பாக, அப்பகுதியில் வசிப்பதாகவும், கற்பாறைகளைச் சுற்றி அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், புவியியலாளர்கள், கும்மகிவி சமநிலைப் பாறையின் மர்மமான இடத்துக்குப் பனிப்பாறைகளின் சக்தியே காரணம், ராட்சதர்கள் அல்ல என்றும், பனிப்பாறைகள் பாறையை எடுத்துச் சென்று 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பின் வாங்கியதுதான் முக்கியக் காரணமென்றும் சொல்கிறார்கள். 

பின்லாந்து அரசால் 1962 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வரும் இப்பாறையின் மேல் 1980 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பைன் மரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

இதையும் படியுங்கள்:
1200 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணாவின் வெண்ணெய் பந்து பற்றி தெரியுமா?
Kummakivi rock

என்ன மக்களே! நம்ம சென்னை அருகே மகாபலிபுரத்தில் இருக்கும் கிருஷ்ணரின் வெண்ணெய் பந்திற்கும் இந்த கும்மகிவிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ?

Kummakivi rock and krishna's butterball
Kummakivi rock and krishna's butterball

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com