நாடும் மொழியும்!

தமிழின் பெருமை
தமிழின் பெருமை
Published on

பாரத நாடு பழம்பெரும் நாடு

நீரதன் புதல்வர்

இந்நினை வகற்றாதீர்!

என்றனர் பெரியோர்! உள்ளூரில் இருக்கும் போது தெருவும், மாவட்ட அளவில் பேசப்படும்போது ஊரும், மாநில நிலையில் மாவட்டமும் குறித்து பேசப்படுவது போல, வெளி நாடுகளுக்குச் செல்கையில்தான் நாம் முழுமையாக இந்தியர்கள் ஆகிறோம். எந்த நாட்டுக்காரர் என்ற கேள்வி எழுகையில் இந்தியன் ஆகி விடுகிறோம்.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன் தோன்றி மூத்தகுடி’

என்று தமிழர்களின் குலப்பெருமை பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி, குமரி முனையை உள்ளடக்கிய பகுதியே ‘லெமூரியா கண்டம்’ என்று அந்நாளில் அழைக்கப்பட்டதாகவும், மனித இனம் பூமியில் முதலில் தோன்றியது இந்தப் பகுதியில்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் உறுதியிட்டுக் கூறுவதை உலகறியும்!

பாரத நாட்டிற்குப் பழமையும், மிக நீண்ட பாரம்பரியமும் இருப்பதைப் போலவே, நம் தாய் மொழியாம் தமிழுக்கும் அதிக மவுசு உண்டு. பழமை மட்டும் அதன் பெருமைக்குக் காரணமல்ல. அதன் பண்பும் தன்மையுந்தான் அதனை உயரத் தூக்கிப்பிடிக்கும் காரணிகள்!

மா, பலா, வாழை என்ற முக்கனிகளைப்போல, தமிழையும் இயல், இசை, நாடகம் என்று வகைப்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் படைத்தார்கள். திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களால் அது தெய்வத் தன்மையை அடைந்தது. சங்க கால இலக்கியங்கள் தோன்றி, சாகா வரம் பெற்றன! எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போன்ற தொகுப்புகள் தோன்றி மக்களை இனிமைப்படுத்தியதோடு இறவாப் புகழை எய்தும் எளிய வழிகளையும் உணர்த்தின. ஐம்பெருங்காப்பியங்களை வடித்து, மன்னர்கள் மட்டுமல்ல மனிதர்களாய்ப் பிறந்த எவரும் உயர்ந்த குணங்களால் உயர் நிலையை எய்தமுடியும் என்பதையும், அறம் தவறும் அரசர்களையும் நீதி தேவதையின் முன்னால் நிறுத்தித் தண்டனை வழங்க முடியும் என்பதையும் நிரூபித்தார்கள்!

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடி மக்ரூன் உருவான கதை!
தமிழின் பெருமை

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றும் உரக்கக் கூறி உலகத்தோரை ஒரே கொடையின் கீழ் கொண்டு வந்தார்கள்!

நேர்மையாகச் சம்பாதிக்கும் பொருள், நாமே விரும்பினாலும் நம்மை விட்டுப் போகாது என்பதை, ’ஏலேல சிங்கர் பொருள் எங்கு கிடந்தாலென்ன?’ என்ற வாசகத்தின் மூலம் விளம்பினார்கள்!

இன்றைக்கும் நம் தமிழர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஆனால், நம் பாரம்பரியங்கள், பண்பாடுகள், மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதைப்போல் நம் நாட்டில் பின்பற்றப்படாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை! எங்கேயோ நாம் பின் தங்கி விட்டோம்.

இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை!இளைஞர்கள் மனது வைத்தால் இழந்த பெருமையை எளிதில் மீட்டு எடுக்கலாம்! பாரம்பரியத்தை நினையுங்கள்! தாத்தனும், முப்பாட்டனும், அவர்கள் பாட்டன்களும் நன்கு வாழ்ந்தார்கள் என்பதில் பெருமைதான்! அதைவிடப் பெருமை தருவது அவர்கள் வழியில் நாமும் அமோகமாக வாழ்கிறோம் என்பதுதான்! நமக்கு நம் தமிழின் பின்புலம் இருக்கும்போது, கவலைப்படவே தேவையில்லையே!

தமிழின் பின்புலத்தை விளக்கும் ஓர் உதாரணம்!

1912 ல் புழக்கத்திலிருந்த 10 ரூபாய் நோட்டைப் பாருங்களேன்! தமிழின் பழமையும், பெருமையும், முக்கியத்துவமும் விளங்கும்!

இதையும் படியுங்கள்:
உலகிலேயே அமைதியான 5 நாடுகள் எது தெரியுமா?
தமிழின் பெருமை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com