பண்டைய ஆப்பிரிக்க கலாச்சாரம் கொண்ட எகிப்த் ஆண்களின் தாடி ரகசியம்…!

Ancient African
Ancient African

பண்டைய ஆப்பிரிக்க கலாச்சாரம் கொண்ட எகிப்த் ஆண்களின் தாடி கீழ் நோக்கி பிண்ணப்பட்டிருக்கும். அல்லது அதனை சீராக சீவிக் கட்டிருப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்ததன் காரணம் பற்றிதான் நாம் இப்போது பார்க்கவுள்ளோம்.

ஒவ்வொரு நாட்டிலும், பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்களின் தாடிக்கும், ஒவ்வொரு பெண்களின் கூந்தலுக்கும் மிகுந்த வேறுபாடுகள் இருக்கும். முடியின் அமைப்பில் மட்டுமல்ல அவர்கள் தங்கள் கூந்தலையும் தாடியையும் வடிவமைத்திருக்கும் விதமும் மாறுப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு பண்டைய தமிழகம் கேரளா எல்லைப் பகுதிகளின் மலைகளில் வாழ்ந்த மக்கள், குலங்களை முடிப் பின்னலை வைத்துதான் அடையாளப்படுத்தினார்களாம்.

அதாவது, ஒரு கிராமத்தில் ஐந்து குலங்கள் இருந்தால், முதல் குலம் ஒரே பின்னலும், இரண்டாவது குலம் இரண்டுப் பக்கம் இரண்டு பின்னல்களும், மூன்றாவது குலம் மூன்று பின்னல்களும் என பெண்கள் தங்கள் குலத்திற்கேற்ப கூந்தலைப் பின்னுவார்களாம். அதுவே அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடையாளம்.

அப்படிதான், கூந்தலின் வடிவமைப்பும் தாடியின் வடிவமைப்பும் அந்தக் காலத்தில் அழகிற்காக மட்டுமல்லாமல், ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது.

பண்டைய எகிப்த் மக்களுக்கும் இது போன்ற ஒரு பின்னணி கதை உள்ளது. இந்த மக்கள் கெமட் என்றழைக்கப்படுவார்கள். கெமட் என்பது எகிப்தியர்களின் மொழியில் கருப்பு நிலம் என்று பொருள். ஏனெனில் அவர்களின் கெமட் நாடு கருப்பு மணலால் சூழப்பட்டதாகும். எகிப்தில் வாழ்ந்த அந்த மக்கள், ஆப்பிரிக்காவின் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். ஆகையாலேயே அவர்களை ஆப்பிரிக்க மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்.

ஆப்பிரிக்க கலாச்சாரத்தின்படிதான் இந்த தாடியும் கெமட் மக்களால் பின்பற்றப்பட்டது. இவர்கள் வைத்த தாடி , அதிகாரம் மற்றும் வெற்றி ஆகியவற்றின் அடையாளம் என்பது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கையாகும்.

இதையும் படியுங்கள்:
ஆச்சரிய ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை தேநீரின் மகத்துவம்!
Ancient African

இந்த தாடியை கெமட் மக்கள், மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஆண்கள் அதிகமாகவே பயன்படுத்தினார்கள். சாதாரண பிரஜைகள் இந்த தாடியை வைத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, அனைத்து ராஜாக்களும் கட்டாயம் இந்த தாடியைத் தான் வைப்பார்கள். ஏனெனில், அந்த தாடியுடன் இருக்கும் ராஜாக்கள், பூமியில் பிறந்த கடவுள் என்று மக்கள் நம்பினார்கள்.

அதிகாரத்தை நல்முறையில் பயன்படுத்தி நாட்டை நல்வழியில் கொண்டுச்செல்ல இந்த தாடியும் ஒரு பங்காற்றியது என்றே கூற வேண்டும். எனெனில், மக்களின் அந்த கடவுள் நம்பிக்கையானது, அவர்களுக்குள் பயத்தை கலந்து தீங்குச் செயல்களை செய்ய அனுமதிக்காமல் இருந்தது.

நம்பிக்கைக்கு வலிமை அதிகமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com