அழகிய பாரிஸுக்கு கீழ் 6 மில்லியன் மக்களின் எலும்புக்கூடுகள்!

Catacombs
Catacombs
Published on

நாம் வியந்துப் பார்க்கும் அழகிய நாடான பாரிஸ், ஒரு பாதாள கல்லறைக்கு மேல் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?

வரலாற்றைத் தோண்டி பார்க்கையில் பல கருப்பு நிகழ்வுகள் இருக்கும். உலகம் முழுவதும் எண்ணற்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சிலவற்றிற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஆனால், பலவற்றிற்கு ஒரு சிறு ஆதாரம் கூட இருக்காது. ஒரு பயங்கரமான நிகழ்வின் பெரிய ஆதாரம்தான், இந்த பாதாள கல்லறை.

பல நூறு வருடங்களுக்கு முன் நாம் செல்வோம். அதாவது 18வது நூற்றாண்டு காலத்தில், ஒரு கொடிய நோயினால், மக்கள் கணக்கில்லாமல் இறந்தார்கள். அவர்களின் மத நம்பிக்கையின்படி உடல்களை எரிக்கமாட்டார்கள். கல்லறையில் புதைக்கும் முறையையே பின்பற்றினார்கள்.

அப்படியிருக்கையில், நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களை இறந்தவுடனே அருகில் இருக்கும் இடங்களில் புதைக்க ஆரம்பித்தார்கள். அதனால், சில காலங்களிலேயே அந்த நாடு முழுவதும் பரவலாக கல்லறைகள் மட்டுமே இருந்தன. மக்கள் வாழும் பகுதிகள் கூட குறைந்துவிட்டன. இதனால், என்ன செய்வது என்று அறியாமல் தவித்த ராஜா மற்றும் மக்கள் ஒரு முடிவை எடுத்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் 300 கிமீ கொண்ட பாதாளத்திற்கு இந்த சவங்களை மாற்றி வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இது இறந்தவர்களை அவமதிக்கும் செயல் என்று சிலர் கூறினாலும், உயிரோடு இருப்பவர்களைக் காக்கும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லறையையும் தோண்டி மாற்றுவது அவ்வளவு சுலபமா என்ன? கிட்டத்தட்ட 12 வருடங்களாக உழைத்து ஏறதாழ 6 மில்லியன் உடல்களை இந்த பாதாளத்திற்கு மாற்றினார்கள்.

அதுவும் இரவு நேரங்களில் மட்டும்தான் இந்த வேலை நடக்கும். ஏனெனில், இந்த செயல், மக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், சர்ச்சுகள் செயல்படுவதற்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்பதற்கும்தான். அப்படி உருவான ஒரு பாதாள கல்லறைதான் அது.

இதையும் படியுங்கள்:
"நண்பா வா இப்பவும் எப்பவும்" கூலி படத்தில் மீண்டும் நண்பருடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!
Catacombs

அப்போது ஊருக்குப் புறமாக இருந்த அந்த இடத்திற்கு மேல்தான், இப்போதைய முழு பாரிஸும் இருக்கிறது.

இந்த பாதாள கல்லறையின் 1கிமீ அளவு தூரம் வரை மட்டும் தற்போது சுற்றுலா இடமாக மாறியுள்ளது. இங்கு மக்கள் சென்று பார்த்துவிட்டு வரலாம். ஆனால், அங்கு சென்ற மக்கள் அனைவரும் வினோதமான சத்தங்களையும் கேட்பதாக கூறுகிறார்கள். வாடை அடிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஆனால், மிகவும் தைரியமான ஆட்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பது பாரிஸ் மக்களின் எண்ணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com