
தைவானில் சொல்லப்படும் நாட்டுப்புறக்கதைகளில் மிகவும் பிரபலமானது The little girl in red ஆகும். இந்த கதை எவ்வளவு பிரபலம் என்றால், இக்கதையை தழுவி இரண்டு படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
மார்ச் 1998 ஆம் ஆண்டு ஒரு குடும்பம் தைவானில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் டிரெக்கிங் சென்றுள்ளனர். காட்டில் போகிற வழிகளை வீடியோ எடுத்துக் கொண்டே சென்றுள்ளனர். ஆனால், டிரெக்கிங் முடிந்து வந்த கொஞ்ச நாட்களிலேயே குடும்பத்தில் ஒருவர் விளக்கமுடியாத காரணத்தால் இறந்துப் போகிறார். அடுத்த இரண்டு மூன்று நாட்களில் இன்னொருவர் இறந்து போகிறார்.
இதைப் பார்த்த குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் டிரெக்கிங் சென்று வந்த பிறகு தான் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து அந்த வீடியோவை எடுத்துப் பார்கிறார்கள்.
அந்த வீடியோவை பார்த்த குடும்பத்தினருக்கு பயங்கரமான ஷாக். ஏனெனில், இறந்துப் போனவரின் பல் அந்த வீடியோவில் வித்தியாசமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் ஒரு சின்ன பெண் இருந்திருக்கிறாள்.
அந்த பெண் சிவப்பு நிற உடை அணிந்திருந்தாள். அவளுடைய கண்கள் முழுவதும் கருப்பாக இருந்திருக்கிறது. அன்றைக்கு டிரெக்கிங் போன யாருமே அந்த சின்ன பெண்ணை அன்று பார்க்கவேயில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், வீடியோவில் மட்டும் உருவம் பதிவாகியிருக்கிறது.
இதை பார்த்த குடும்பத்தினர் பயந்து அந்த வீடியோவை அங்கிருந்த ஒரு டீ.வி சேனலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டீ.வி சேனல் உண்மையாக நடந்த கோஸ்ட் ஸ்டோரிஸ் போன்றவற்றை ஆராயக்கூடியவர்கள். இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு நம்பிக்கையில்லை.
இது பேயாக இருக்காது கண்டிப்பாக ஏதாவது பெண்ணாக இருக்கும் என்று நினைத்து அந்த ஊரில் போய் விசாரிக்கிறார்கள். ஆனால், அந்த ஊர்க்காரர்கள் இந்த பெண்ணை யாருமே பார்த்ததேயில்லை என்று சொல்கிறார்கள். இந்த கதையை வெளியிடலாம் என்று நினைத்த அந்த டீ.வி சேனல் அந்த வீடியோவை எடிட்டரிடம் கொடுத்தது.
அந்த எடிட்டர் வீடியோவை எடிட் செய்யும் போது சில நேரத்தில் அந்த சின்ன பெண் வீடியோவில் தெரிவதும், சில நேங்களில் தெரியாததுமாக இருந்துள்ளது. இவரும் குழம்பிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டில் ஏதோ சத்தம் கேட்க என்னவென்று பார்த்தால் அவர் வீட்டு சோபாவில் அந்த பெண் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறார். இதுப்போல பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதன் பிறகு இன்றுவரை தைவான் நாட்டில் யாரும் அந்த காட்டு வழிப் பாதையை பயன்பத்துவதில்லையாம்!