

இரண்டாம் உலகப்போர் சமயம், ஜெர்மனியின் கை ஓங்கியிருந்த காலம். அமெரிக்கா அவர்களை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அவர்களிடம் இருந்த போர் கப்பலை ஜெர்மனியின் ரேடாரில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பல ஆய்வுகளை செய்தார்கள். 1943 ல் அமெரிக்காவில் Philadelphia naval shipyard ல் ஒரு எக்ஸ்பெரிமெண்டை (Philadelphia experiment) செய்கிறார்கள். மனிதனை வைத்து செய்யப்பட்ட மிக மோசமான சோதனை என்று சொல்கிறார்கள்.
இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் டெஸ்லாவுடைய கோட்பாடுகளை வைத்து உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. Philadelphia கடற்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த ராணுவக் கப்பல் திடீரென்று மறைந்து 15 நிமிடத்திற்கு பிறகு அதே இடத்தில் தோன்றியிருக்கிறது. அந்த கப்பலை சுற்றி பச்சை நிற ஒளி உருவாகி அந்த கப்பலில் இருந்த மனிதர்களுடன் அது மறைந்து போயிருக்கிறது.
இந்த கப்பலை 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Norfolk Virginia வில் மக்கள் பார்த்ததாக சொல்லப்படுகிறது. 30 நிமிடங்களில் திரும்ப மறைந்து Philadelphia கடலில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதை பார்த்தவர்களுக்கு இது உண்மைதானா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
இப்போது வெளியில் இருந்தவர்கள் அந்த கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்கு உள்ளே சென்றனர். அந்த கப்பலுக்குள் நம்ப முடியாத காட்சிகளை பார்க்கிறார்கள். நிறைய பேர் இறந்து போயிருர்கிறார்கள், இன்னும் சிலர் சுவற்றுக்குள் மாட்டியிருப்பது போல இருந்திருக்கிறார்கள், சிலருக்கு மனநலம் பாதித்திருக்கிறது.
இந்த விஷயங்களை பற்றி வெளியே வந்தது 1955 பிறகு தான். Morris k. jessup என்பவர் UFO பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியிருக்கிறார். 'The case of the ufo' என்ற புத்தகத்தை எழுதுகிறார். அவருக்கு Carl M. Allen என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் Philadelphia சோதனை எப்படி நடந்ததும் என்றும், அதை தான் அருகில் இருந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் பொது மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. இதற்கு பிறகு அந்த கப்பலில் பயணம் செய்த Edward Cameroon அன்று தனக்கும் தன்னுடைய பிரதர் Duncan Cameroon இருவருக்கும் என்ன நடந்தது என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அன்று அந்த கப்பலில் பச்சை நிறப் புகை கிளம்பியதுமே Edward மற்றும் Duncan அந்த கப்பலை விட்டு கடலில் குதித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் montauk ராணுவதளத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் Teleport ஆகி அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சுயநினைவேயில்லாமல் இருந்திருக்கிறது.
அவர்களுக்கு Montauk ராணுவத்தளத்தில் உள்ளவர்களே பெயர் வைத்து அவர்கள் அடையாளத்தை மாற்றியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் செய்த பரிசோதனைக்கு Duncan ஐ தேர்ந்தெடுத்தனர். இதனால் Duncan இன் உடல்நிலை வீணாகிறது. ஒரு நாள் அந்த அறையில் திடீரென்று ஒரு மிருகம் தோன்றியிருக்கிறது. அது அங்கிருந்த நிறைய பேரை கொல்ல ஆரம்பிக்கிறது. இதனால் அந்த இடம் மூடப்பட்டு 1983 ல் Montauk project முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது என்று Edward சொல்லியிருக்கிறார். இதை கேட்ட சில மக்கள் இதை கட்டுக்கதை என்றும் இன்னும் சிலர் இது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.