

மனித நாகரிகத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து வரலாற்றை பாதுகாக்கும் எண்ணமும் வளர்ந்தது. பழைய காலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களின் சாதனைகள், கலாச்சாரச் சின்னங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் கலைப் பொருட்களை அடுத்த தலைமுறைகளுக்காக பாதுகாக்க விரும்பினர். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக உருவான அமைப்பே மியூசியம் (Museum) ஆகும். இன்றைய உலகின் மிகப்பழமையான மியூசியம் என்னிகல்டி–நன்னாவின் மியூசியம் ஆகும். இது மனித வரலாற்றில் உருவான முதல் அருங்காட்சியகமாக கருதப்படுகிறது.
மியூசியம் என்பது வரலாற்று, கலாச்சார, அறிவியல், கலை மற்றும் தொல்லியல் பொருட்களை சேகரித்து பாதுகாத்து, மக்களுக்கு அறிவூட்டும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த முறையான மியூசியம் அமைப்பு உருவாகும் முன்பே, பண்டைய நாகரிகங்களில் பொருட்களை சேகரித்து பாதுகாக்கும் பழக்கம் இருந்தது.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு (530 BCE) பண்டைய உர் (Ur) நகரம் இன்றைய இராக் (Iraq) நாட்டில் என்னிகல்டி–நன்னா என்பவர் பழமையான மியூசியத்தை நிறுவினார்.
என்னிகல்டி–நன்னா பண்டைய பாபிலோனிய அரசன் நபோனிடஸ் (Nabonidus) அவர்களின் மகள் ஆவார். அவர் ஒரு அரசகுமாரி. சந்திரக் கடவுள் “நன்னா”வின் கோயில் தலைமை மதப்பணியாளர். வரலாறு மற்றும் தொல்லியல் மீது ஆர்வம் கொண்ட அறிவாளி. அவர் வாழ்ந்த காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதுவே உலகின் முதல் மியூசியம் உருவாக காரணமானது.
மியூசியம் அமைந்த இடம் உர்: மெசபொத்தேமியா நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. இது சுமேரிய நாகரிகத்தின் மையமாக இருந்தது. கல்வி, வணிகம், மதம் மற்றும் கலை வளர்ச்சியடைந்த இடமாக விளங்கியது. அத்தகைய அறிவு நிறைந்த நகரத்தில் உருவானதே உர் என்ற பழமையான மியூசியம்.
மியூசியத்தில் வைக்கப்பட்ட பொருட்கள்: என்னிகல்டி–நன்னாவின் மியூசியத்தில் பழங்கால சிலைகள், கோயில் வழிபாட்டு பொருட்கள், கல்வெட்டுகள், களிமண் பலகைகள் (Clay Tablets), பல நூற்றாண்டுகள் பழமையான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பொருட்கள், என்னிகல்டி–நன்னா வாழ்ந்த காலத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
மியூசியத்தின் முக்கிய சிறப்புகள்
விளக்கக் குறிப்புகள் (Labels): ஒவ்வொரு பொருளுக்கும் அருகில் மூன்று மொழிகளில் எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகள் இருந்தன. இது இன்றைய நவீன மியூசியங்களில் காணப்படும் “Label system”-ன் முதல் எடுத்துக்காட்டு. பார்வையாளர்கள் பொருளின் வரலாற்றை புரிந்துகொள்ள உதவியது.
கல்வி நோக்கம்: இந்த மியூசியம் வெறும் காட்சிக்காக மட்டும் அல்ல மக்களுக்கு வரலாற்று அறிவு வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வரலாறு ஒரு கல்வி பொருளாக மாற்றப்பட்டது
தொல்லியல் சிந்தனை: இந்த மியூசியம் தொல்லியல் (Archaeology) சிந்தனையின் தொடக்கமாக விளங்கியது. பழைய பொருட்களின் மதிப்பை உணர்த்தியது.
வரலாற்று முக்கியத்துவம்: உலக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற காரணங்கள் மியூசியம் என்ற கருத்தின் தொடக்கம், மனிதர்கள் தங்கள் வரலாற்றை பாதுகாக்க முயன்ற முதல் சான்று பெண்கள் அறிவு மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்ததை காட்டுகிறது. நவீன அருங்காட்சியகங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
என்னிகல்டி–நன்னாவின் மியூசியம், மனித நாகரீகத்தின் அறிவு வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வரலாற்றுச் சான்றாகும். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்துக்கும், கிமு 530-இல் உர் நகரில் உருவான இந்த மியூசியமே முன்னோடியாக அமைந்தது. எனவே, “கடந்த காலத்தை பாதுகாப்பதே எதிர்காலத்தின் வழிகாட்டி” என்பதற்கு என்னிகல்டி–நன்னாவின் மியூசியம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.