காலத்தால் அழியாத ராஜா ரவிவர்மாவின் புராண பெண் சித்திர ஓவியங்கள்!

ராஜா ரவிவர்மா ஓவியம்
ராஜா ரவிவர்மா ஓவியம்

ல்லா காலத்திலும் விரும்பப்படும் மிகவும் பிரபலமான இந்திய ஓவியர்களில் ஒருவர் ராஜா ரவி வர்மா. இவர் இந்து தெய்வங்கள் மற்றும் புராண, இதிகாச கதாபாத்திரங்களை, குறிப்பாக அக்கால பெண்களின் தத்ரூப உருவ ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்திய ஓவியக் கலையின் தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவருடைய ஓவியங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இவர் வரைந்த பெண் ஓவியங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை . கண்களால் கதை பேசும் இவர் வரைந்த புராண காலத்து பெண் ஓவியங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

சகுந்தலா: சகுந்தலா மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் உள்ள காட்சியை சித்தரிக்கிறது. சகுந்தலா, ஒரு அழகான மற்றும் நல்லொழுக்கமுள்ள பெண். தனது காதலரான துஷ்யந்த மன்னரிடமிருந்து கடிதத்தைப் பெறுவதைக் காட்டுகிறது. இந்த ஓவியம் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான மற்றும் யதார்த்தமான சித்தரிப்புக்காகவும், அழகான வண்ணங்களுக்காகவும் அறியப்படுகிறது. இந்திய கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இது, அதன் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்திற்காக மிகவும் மதிக்கப்படுகிறது.

ஓவியர் ராஜா ரவிவர்மா
ஓவியர் ராஜா ரவிவர்மா

ஹம்ச தமயந்தி: ராஜா ரவி வர்மாவால் 1899ல் உருவாக்கப்பட்ட கேன்வாஸில் எண்ணெய் ஓவியம் ஆகும். மிக பிரபலமான இது சமஸ்கிருத காவியமான நள மற்றும் தமயந்தியின் கதையை சித்தரிக்கிறது. கதாபாத்திரங்களின் யதார்த்தமான சித்தரிப்பு, காட்சியின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன்  ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. கதையின்படி, தமயந்தியும் மன்னன் நளனும் தங்க அன்னத்தை தூதராகப் பயன்படுத்தி, செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஓவியம் தமயந்தியும், நளனும் அந்தரங்கமான தருணத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவரையொருவர் அன்புடனும் பக்தியுடனும் பார்ப்பதை  நிஜ உணர்வுக்குவியலாக காட்டுகிறது.

சாவித்திரி: அஸ்வபதி மன்னன் மகளான சாவித்திரி  காட்டில்  வாழ்ந்து கொண்டிருந்த சத்யவான் என்ற இளவரசனை சந்தித்து காதலித்த கதையின் அடிப்படையில் அமைந்த ஓவியம் இது. மரணத்தின் கடவுளான யமனை சத்யவானின் உயிரைப் பறிக்க விடாமல் சாவித்திரி வாதிட்டுத் தடுத்த தருணத்தை ஓவியம் படம் பிடிக்கிறது.  சத்யவான் அவள் மடியில் அமர்ந்திருக்க சாவித்திரி எனும் பெண்ணை சக்தி வாய்ந்த மற்றும் உறுதியான நிலைப்பாட்டில் சித்தரிக்கிறது . காட்சியின் ஆழ்நிலைத் தன்மையை வலியுறுத்தும் வகையில், யமன் முன்புறத்தில் ஒரு அமானுஷ்ய பாத்திரமாகக் காணப்படுகிறார். இது இந்தியக் கலையின் தலைசிறந்த படைப்பாகவும் கலாசார மற்றும் சமூக விழுமியங்களின் பிரதிநிதித்துவமாகவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நேரம் தவறாமையினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
ராஜா ரவிவர்மா ஓவியம்

திரௌபதி: இந்திய இதிகாசமான மகாபாரதத்தின் காட்சியை சித்தரிக்கும் தத்ரூப ஓவியம். அவையோர் முன்னிலையில் பாண்டவர்களின் மனைவி திரௌபதி  துச்சாதனனால் ஆடை களைந்து அவமானம் கொண்டு கிருஷ்ணனை சரணடைந்து மானம் காத்த காட்சி. மகாபாரதத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்பட்டு இந்திய கலை மற்றும் இலக்கியங்களில் பரவலாக சித்தரிக்கப்படும் நிழலான இக்காட்சி ரவிவர்மா ஓவியத்தில் நிஜமாகி அசத்துகிறது.

யசோதாவுடன் கிருஷ்ணா: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட இந்தப் புகழ்பெற்ற ஓவியத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தனது வளர்ப்புத் தாய் யசோதாவுடன் சிறு குழந்தையாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த ஓவியத்தை கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கவுடியார் அரண்மனையில் பார்க்கலாம். நம் கற்பனையில் உள்ள மென்மையான குணம் படைத்த தாய் யசோதாவையும் குறும்புக்கார கிருஷ்ணரையும் இப்படித்தான் இருப்பார்கள் என நம் நினைவி்னில் நிறுத்தும் புராண மாந்தரின் அச்சு அசல் ஓவியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com