அரச வாழ்க்கையின் ரகசியம்! இந்தியாவின் 5 பிரம்மாண்ட கோட்டைகளும் அரண்மனைகளும்!

பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த 5 இந்தியக் கோட்டைகள்.
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

இந்தியாவின் அரச மரபையும் கட்டிடக்கலையின் பிரம்மாண்டத்தையும் வெளிப்படுத்தும் 5 முக்கிய இந்தியக் கோட்டைகள், அரண்மனைகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஜெய்ப்பூர் அரண்மனை, ஜோத்பூர் மெஹ்ரன்கர் கோட்டை, மைசூர் மகாராஜா அரண்மனை, டெல்லி செங்கோட்டை, ஜெய்ப்பூர் ஹவா மஹால் ஆகியவை வரலாறு, கலை, அருங்காட்சியகங்கள், கோயில்கள், தோட்டங்கள், பார்வை நேரங்கள் என பயணிகளுக்கான முழு தகவல்களுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

1. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை

இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் கோட்டைகளையும், அரண்மனைகளையும் பார்க்கக் கூடிய இடங்களில் ஒன்றாகும். பாதி அரண்மனை, பாதி அருங்காட்சியமாக விளங்கும். இதில் கடந்த கால கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது. அரச காலத்தைச் சேர்ந்த ஆயுதக்கிடங்குகள், ஆயுதங்கள் என தனித்துவமான அரண்மனையாகும். இது முகலாய ராஜபுதானா மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைப் பாணிகள் இணைத்து கட்டப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம்

2. ஜோத்பூரில் உள்ள மெஹ்ரன்கர் கோட்டை

இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

இக்கோட்டை உயரமான மேடையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான, தடிமனான சுவர்கள் கட்டிடக்கலையில் கவர்ச்சிகரமானதில் புகழ் பெற்றது. இக்கோட்டையைக் கடக்க ஏழு வாயில்களைக் கடக்கவேண்டும். கோட்டைக்குள் ஏராளமான அரண்மனைகள் உள்ளன. கோட்டைக்குள் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அதில் ஆயுதங்கள், ஆடைகள், ஓவியங்கள் அலங்கரிக்கப்பட்ட பழங்கால அறைகள் உள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

3. மைசூர் - மகாராஜா அரண்மனை

இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

இந்த அரண்மனை ஒரு சிறந்த அழகான  கோட்டையாகும். இந்தக் கோட்டையில் 14-க்கும் மேற்பட்ட கோயில்கள், தோட்டங்கள், முற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த அரண்மனை ஆங்கிலேயர்களின் இந்தோ-சார செனிக் கட்டிடக்கலையுடன், மறுமலர்ச்சி பாணியில் போன்ற கலப்பு கட்டிடக்கலைப்

பாணியில் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும். இங்கு மனதைத் கவரும் தோட்டம் உள்ளது. இந்த அரண்மனையில் 12 இந்துக் கோயில்கள் உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5-30 மணி வரை திறந்திருக்கும்.

4. டெல்லி - செங்கோட்டை

இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

இது இந்தியாவில் யுனெஸ்கோவா அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். நரகத்தின் புகழ்பெற்ற கடந்த காலத்தை எடுத்துரைக்கும் வகையில் முழு கம்பீரத்துடன் வசீகரத்துடன் இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான கோட்டை முகலாய கட்டிடக்கலையின் ஒரு உச்சகட்ட எடுத்துக்காட்டாகும்.

ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றிய போது இக்கோட்டையைக் கட்டினார்.

இந்த கோட்டை பெரிய சிவப்பு மணல்கற்களால் கட்டப்பட்டுள்ளது இதன் காரணமாகவே இக்கோட்டைக்கு செங்கோட்டை என்ற பெயர் வந்தது. இங்கு ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 போன்ற தேசிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. காலை 10 மணி முதல்- மாலை4 மணிவரை திறந்திருக்கும்.

5. ஜெய்ப்பூர் - ஹவா மஹால்

இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India

இளம் சிவப்பு நகரமான ஜெய்ப்பூரின்மற்றுமொரு ரத்தினம் இந்த ஹவா மஹால்.அரண்மனை கிருஷ்ணரின் கிரீட வடிவில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட உள்ளது.

அரச குடும்ப பெண்களும் அவர்களின் பணிப்பெண்களும் பிறர் பார்க்காமலேயே நகரத்தின் அன்றாட நிகழ்வுகளை காணும் வகையில் இந்த அரண்மனை அவர்களுக்காக பிரத்தியேகமாக கட்டப்பட்டது. இந்தக் கோட்டை  ஜரோகாக்கள் எனப்படும் 953 சிறிய ஜன்னல்களுடன் கச்சிதமாக அமைந்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4-30 மணி வரை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுத் தளங்களின் பார்வையிடும் நேரங்கள், கட்டிடக்கலை நயங்கள் மற்றும் பயணத் திட்டமிடுதலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பீரங்கிகளுக்கே சவால் விட்ட கோட்டை அகழிகள்: இந்திய வரலாற்றின் பிரம்மாண்ட ரகசியங்கள்!
இந்தியக் கோட்டைகள் - Historic Palaces India
logo
Kalki Online
kalkionline.com