தலையில் அணியும் தொப்பிகள் (Hat) அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு போன்ற மாசிலிருந்து தலை மற்றும் தலைமுடியைக் காக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் சடங்குகள், சமயத் தேவைகளுக்கும் தொப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதேப் போன்று பாதுகாப்பு, காவல் உள்ளிட்ட பல்வேறு படைத்துறைகளிலும் தொப்பிகள் பயன்பாட்டிலிருக்கின்றன.
இந்தத் தொப்பி என்பது முடி, மேல்மறைப்பு, விளிம்பு, தொப்பிப்பட்டி என்று நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும்.
1. முடி - தலையின் மேற்பகுதியை மூடும் பகுதி.
2. மேல்மறைப்பு - முன்பகுதியில் விறைப்பாக நீண்டிருக்கும் பகுதி. இது வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
3. விளிம்பு - தொப்பியின் முடிப்பகுதியின் அடிப்பக்கத்தில் கிடையாகத் தொப்பியின் நாற்புறமும் சூழ வட்டமாக இருக்கும் பகுதி.
4. தொப்பிப்பட்டி - இது விளிம்புப் பகுதிக்கு மேல், முடியின் அடிப்பகுதியைச் சுற்றியிருக்கும் பட்டி.
ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. வட்டம், நீள்வட்டம் என்று பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. உலகம் முழுவதும் ஐநூற்றுக்கும் அதிகமான தொப்பி வகைகள் பயன்பாட்டிலிருக்கின்றன. இருப்பினும், அவற்றுள் கீழ்க்காணும் தொப்பி வகைகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆசிய அரிசித் தொப்பி என்று அழைக்கப்படும் கூம்பு வடிவத் தொப்பி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு பாரம்பரியத் தொப்பி ஆகும். இது வைக்கோல், மூங்கில் மற்றும் பனை ஓலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தொப்பி வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பை வழங்கும் அகலமான விளிம்புடன் உள்ளது.
நவீன உலகில் மிகவும் பிரபலமான தொப்பிகளில் ஒன்று. பல விளையாட்டு அணிகள் பேஸ்பால் தொப்பியைத் தங்கள் விருப்பமான தொப்பியாகத் தேர்வு செய்கின்றன. மேலும், இத்தொப்பிகளை விளையாட்டுப் போட்டிகளில் ஆதரவாளர்கள் பெருமையுடன் அணிவதற்காக, நிறுவனங்கள் தங்கள் இலச்சினை மற்றும் முத்திரைகளைப் பதித்து விலையின்றி வழங்குகின்றனர்.
பிரான்சில் மிகவும் பிரபலமாக அணியப்படும் பெரட், இன்று மக்களிடையே ஒரு நாகரீகமான ஆடையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள் அணிந்திருந்த இத்தத் தொப்பி, தங்களுடைய உயர்நிலையை வெளிப்படுத்தும் தொப்பிகளாக மாற்றம் பெற்று பயன்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு காலத்தில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வெயிலில், தங்கள் தலையில் வெப்பம் தாக்காமல் இருக்க வாளி தொப்பி அணிந்திருந்தனர். இன்று இந்தத் தொப்பிகள், நவநாகரீகத் தோற்றத்தைக் காட்ட ஆண்களும் பெண்களும் அணியும் தொப்பிகளாக மாறி இருக்கின்றன.
மேற்கத்தியத் திரைப்பட ரசிகர்கள் யாரும் இந்த வகையான தொப்பிகளைப் பார்த்து ரசித்திருப்பார்கள். மேற்கத்தியத் திரைப்படங்களின் நாயகர்கள் அணிந்த இத்தொப்பிகள் இன்றும் பிரபலமாக உள்ளன. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் இவ்வகைத் தொப்பிகளை அணிந்து சுற்றித் திரிய விரும்புகிறார்கள்.
தொப்பிகளில் கவர்ச்சியானதாகக் கருதப்படும் இத்தொப்பி, உலகின் மிகவும் முன்னணித் தொப்பிகளில் ஒன்றாகவும், அதன் உருளை வடிவம் மற்றும் மேலே தொங்கும் பெரிய குஞ்சம் ஆகியவற்றால் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் இருக்கிறது.
தொப்பிகளில் கவர்ச்சியானதாகக் கருதப்படும் இத்தொப்பி, உலகின் மிகவும் முன்னணித் தொப்பிகளில் ஒன்றாகவும். அதன் உருளை வடிவம் மற்றும் மேலே தொங்கும் பெரிய குஞ்சம் ஆகியவற்றால் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் இருக்கிறது.
இன்றையப் பெண்கள் வெயிலில் அணியும் மிகவும் பொதுவான தொப்பிகளில் ஒன்று. சூரியத் தொப்பி பெருமையுடன் ஒரு அகன்ற விளிம்பைக் காட்டுகிறது. இது அணிபவரின் முழுத் தலையையும் சூரியனின் எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்நாட்களில் இத்தொப்பிகள் அணிவது மிகவும் நாகரீகமாகக் கருதப்படுகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் கடற்கரைக்குச் செல்லும் போதும், பூங்காவில் சுற்றி வரும் போதும் இவ்வகைத் தொப்பிகள் அணிவதையே விரும்புகின்றனர்.
பண்டையக் காலங்களில் உலகின் நாகரிக மனிதர்களால் அணியப்பட்ட மற்றொரு உன்னதமான தொப்பி. இது ஒரு அகலமான விளிம்பு மற்றும் உயரமான கிரீடம் கொண்டது. பல வரலாற்று நபர்கள் இந்தத் தொப்பியை மிகச்சிறந்த நிகழ்வுகளின் போது அணிந்து செல்வது வழக்கமாக இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் இவ்வகைத் தொப்பிகளை அணிந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றனர்.
வைக்கோல் தொப்பிகள் என்பது பல நூற்றாண்டுகளாக பிரபலமாக இருக்கும் ஒரு வகை தலைக்கவசமாகும். இவ்வகைத் தொப்பிகள் பொதுவாக வைக்கோல் அல்லது பிற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சூரிய ஒளியிலிருந்து நிழலை வழங்கும் அவற்றின் அகலமான விளிம்புகளுக்கு பெயர் பெற்றவை.
இந்தியாவில், காந்தி தொப்பி எனும் ஒரு தொப்பி பயன்பாட்டிலிருந்து வருகிறது. இதனை, காந்தி குல்லாய் என்றும் சொல்கின்றனர். இது, கதர் (காதி) துணியால் செய்யப்பட்ட முன்புறமும் பின்புறமும் குறுகி நடுவில் விரிந்திருக்கும் ஒரு வகையான தொப்பியாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டு வரை இதை அணிந்திருந்ததால் இது காந்தி குல்லாய் என அறியப்பட்டது;
காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும், தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் இது அடையாளமாக இருந்தது. ஜவஹர்லால் நேருவே இதை உண்மையில் பிரபலப்படுத்தியவர். இந்தியாவில் இன்றும் காந்தியவாதிகளாலும், இந்தியாவின் அரசியல்வாதிகளாலும், குறிப்பாக, காங்கிரசு கட்சியினரால் இத்தொப்பி அணியப்படுகிறது. இது மட்டுமின்றி, மும்பை டப்பா வாலாக்களின் தொழில்முறை அடையாளமாகவும் இது உள்ளது. குசராத் மற்றும் மராட்டிகளின் உடையின் ஓர் அங்கமாகவும் விளங்குகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.