
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி திருவிழா வெவ்வேறு வழிகளில் கொண்டாடி வருகிறோம். குறிப்பாக வட இந்தியாவில் நவராத்திரியின் போது பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்படும் வித்தியாசமான சடங்கு ஒன்று ஒவ்வொரு நவராத்திரியின் போது அஹமதாபாத்தில் நடத்தப்படுகிறது. சதுபாலா நிபோலில் இது நடக்கிறது.
நவராத்திரி திருவிழாவின் எட்டாவது நாளாக இரவில் பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்களைப் போல் புடவை உடுத்தி கர்பா என்ற பாரம்பர்ய சங்கு நடனம் ஆடுகிறார்கள்.
இந்த ஆச்சர்யமான பாரம்பரியம் 200 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது இது எதனால் தோன்றியது என்பதன் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். சதுபென் என்ற பெண்ணின் வாழ்க்கையிலிருந்து இந்த நடைமுறை தொடங்குகிறது.
முகலாயப் பிரபு ஒருவருக்கு எதிராக பரோட் ஆட்களின் போராட்டத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக இவர் பாடுபட்டதாக நம்பப்படுகிறது. துரதிஷ்டவசமாக அப்பெண்ணை பாதுகாப்பதில் அந்த ஆட்கள் தோல்வியடைந்தனர். இதன் விளைவாக அவர் தன் குழந்தையை இழக்க நேர்ந்தது. அந்த வேதனையில் சதுபென் அந்த ஊர் ஆண்களை சபித்தார். அந்த சாபத்தின் படி அவர்களின் எதிர்கால சந்ததியினர் வெட்கத்துடனும் குற்ற உணர்வுடனும்,பயத்துடனும் வாழ்வார்கள் என்று சபித்தார். இந்த சாபத்திலிருந்து வெளிப்படும் முயற்சியாக, ஒரு பாரம்பரியத்தைக் கடைபிடிக்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களை வலியுறுத்தியது.
கர்பா நடனம்
நவராத்ரியின் போது சதுபாலா நிபோல் கொண்டாட்டமான இடமாக மாறுகிறது. ஆண்கள் கண்கவர் புடவைகளை அணிந்து கர்பா நடனம் நிகழ்த்துகிறார்கள். இது சமூகத்தில் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.சதுமாதாவின் ஆன்மாவை போற்றவும் சமரசம் செய்யவும் சாபத்திலிருந்து விடுபடவும் ஒரு கோவில் நிறுவப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் தங்கள் நன்றியையும் மன்னிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக கர்பா நடனம் ஆடுகிறார்கள். இதனால் சதுமாதா தங்கள் குடும்பங்களை ஆசீர்வதிப்பதாக நம்புகின்றார்கள்.
ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடும் நடனம் மற்றும் இந்த வித்தியாசமான பாரம்பரிய பரோட் சமூகத்தின் அடையாளமாக திகழ்கிறது.