கோவாவிற்கு அடுத்து போர்த்துகீசியர்களின் முக்கிய கோட்டை இதுதான்!

Vasai Fort
Vasai Fort

போர்த்துகீசியர்களின் முக்கிய தலமான கோவாவிற்கு அடுத்ததாக வடமாநிலத்தில் உள்ள ஒரு கோட்டைதான் அவர்களின் முக்கிய தளமாக இருந்தது. அதாவது அவர்களின் மூல உபாய இடமாக இருந்தது.

கோவாவிற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டையின் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டிருந்தது. இந்தக் கோட்டையானது சுமார் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் அது கடல் நீரால் நிரப்பப்பட்ட அகழியைக் கொண்டிருந்தது. இதன் வலுவான கல் சுவர்  4.5 கிமீ நீளமுள்ளது.

கோட்டைக்கு இரண்டு வாயில்கள் இருந்தன. கோட்டையில் தண்ணீர் தொட்டிகள், சேமிப்புக் கிடங்குகள், ஆயுதக் கிடங்குகள் போன்றவற்றுடன் நன்கு கட்டப்பட்ட ஒரு சிறிய கோட்டையும் இருந்தது. கோட்டையில் தானியங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பதற்கான வயல்களும் இருந்தன. சுவரில் உள்ள பழைய கட்டமைப்புகள் அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளன.

பாசீன் கோட்டை என்றழைக்கப்படும் இந்தக் கோட்டையின் பெயர் வசாய் கோட்டையாகும். இது இந்தியாவின் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். வசாய் பகுதி முதலில் 15ம் நூற்றாண்டில் குஜராத்தின் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1534 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். தங்கள் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வசாய் கோட்டையை கட்டத் தொடங்கினர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், போர்த்துகீசியர்கள் கோட்டையை விரிவுப்படுத்தி பலப்படுத்தினர்.

1739ல், மன்னர் சிவாஜியுடைய அப்பாவின் கீழ் மராட்டியப் பேரரசு போர்த்துகீசியர்களிடமிருந்து வசாய் கோட்டையை வெற்றிகரமாக முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.

மராட்டியர்கள் அடுத்த 80 ஆண்டுகளுக்கு கோட்டையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்தினர்.

இந்த நேரத்தில், மராத்தியர்கள் போர்த்துகீசியம் மற்றும் பிரிட்டிஷ் தாக்குதல்களுக்கு எதிராக கோட்டையை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்தினர்.

பிரிட்டிஷார் மராட்டியர்களை தோற்கடித்து கோட்டையை கைப்பற்றினர். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, வசாய் கோட்டை மகாராஷ்டிர அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1970 களில், இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது.

இதையும் படியுங்கள்:
மண் சுவர்களில் வரையப்படும் மரபு வழி மந்தனா ஓவியங்கள்!
Vasai Fort

இன்று, வசாய் கோட்டை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகவும், பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இது இப்பகுதியின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

பல அரசுகள் மாற்றி மாற்றி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி, அதன் மூல உபாயத்தைப் பெற நினைத்தார்கள். ஆனால், கம்பீரமாக இந்தியாவின் நிலத்தில் பதிந்திருந்த இந்தக் கோட்டை இறுதியாக இந்திய மக்களுக்கே கிடைத்தது, நம் நாட்டிற்கும் நமக்கும் பெருமையாகவே கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com