வாழும் கோட்டை ஜெய்சல்மேர்!

ஜெய்சல்மேர் கோட்டை
ஜெய்சல்மேர் கோட்டை
Published on

ந்தியாவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் பிரதிபலிப்பதில் கோட்டைகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் பழங்கால கோட்டைகளின் தாயமாக இருப்பது ராஜஸ்தான் மாநிலம்தான். ஜெய்சல்மேர் கோட்டை ராஜஸ்தானில் ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும். ராஜஸ்தானின் ஆறு மலை கோட்டைகளில் ஒன்றாக ஜெய்சல்மேர் மலைக்கோட்டையும் உலகப் பாரம்பரிய களமாக யுனெஸ்கோ நிறுவனம் 2013ம் ஆண்டில் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள கம்பீரமான கோட்டைகளில் ஒன்றான 868 வருட ஜெய்சல்மேர் கோட்டை பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இம்மலைக்கோட்டையை 1156ல் ராஜபுத்திர குல ஆட்சியாளர் ராவல் ஜெய்சல் என்பவரால் தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள திரிகூட மலையில் கட்டப்பட்டது.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னர் வணிகர்கள், பயணிகள், அகதிகள் மற்றும் போர்ப்படையினர் இப்பகுதியை கடந்து செல்கையில், இக்கோட்டையில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வர். மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டைச் சுவர்கள் பகலில் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், மாலையில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும். எனவே, ஜெய்சல்மேர் கோட்டை சோனார்கிலா அல்லது தங்கக் கோட்டை எனப் பெயர் பெற்றது. 868 ஆண்டுகள் பழைமையான மஞ்சள் கற்களால் ஆன ஜெய்சால்மேர் கோட்டை ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

இது ஒரு தற்காப்புக் கோட்டையாக கட்டப்பட்டது. அன்னிய படையெடுப்புகளுக்கு எதிராக கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக, திரிகூட மலையில் மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்சல்மேர் கோட்டை 1500 அடி நீளமும், 750 அடி அகலமும், 250 அடி உயரமும், 15 அடி அடித்தளமும் (அஸ்திவாரம்) கொண்டது. கோட்டையின் உச்சியில் 30 அடி உயர கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை மூன்றடுக்கு வரிசையில் அமைந்த சுவர்களால் கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவர் திடமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. கோட்டையின் இரண்டாவது அல்லது நடுவில் பாம்பு போன்று வளைந்து சுருண்ட சுவர்கள் உள்ளன. ஜெய்சல்மேர் இக்கோட்டை நான்கு வாயில் கொண்டது. அவற்றில் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜெய்சல்மேர் கோட்டை
ஜெய்சல்மேர் கோட்டை

இந்தக் கோட்டை, ‘வாழும் கோட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது ஒரு துடிப்பான, மக்கள் வசிக்கும் நகர்ப்புற மையமாக உள்ளது. பல வரலாற்று கோட்டைகள் வெறும் சுற்றுலா தலங்கள் அல்லது அருங்காட்சியகங்களாக மாறிவிட்டன. ஆனால், இந்தக் கோட்டையின் உள்ளே உள்ள வீடுகளில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொடர்ச்சியான குடியிருப்புக்குப் பிறகும்,கோட்டையானது சுறுசுறுப்பான வணிக நடவடிக்கைகளுடன் பரபரப்பான சமூகமாக உள்ளது. இந்த வரலாற்று கோட்டையின் சுவர்களுக்குள் ஏராளமான கடைகள், உணவகங்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் பிற வணிகங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கை தட்டினால் பறந்துபோகும் நோய்கள்!
ஜெய்சல்மேர் கோட்டை

கோட்டை ஒரு கலாசார மையமாக உள்ளது. பாரம்பரிய ராஜஸ்தானி இசை, நடனம் மற்றும் கைவினைப்பொருட்கள் இன்னும் பயிற்சி இவற்றிற்காக கொண்டாடப்படுகின்றன. மக்கள், அவர்களின் கலாசாரம் மற்றும் மரபுகள்தான் ஜெய்சல்மேர் கோட்டையை வாழும் கோட்டையாக மாற்றுகிறது. மஞ்சள் கற்களால் ஆன நினைவுச்சின்னம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அதன் ஆடம்பரம் மற்றும் அழகுடன் மயக்குகிறது. இது தங்கச் சூழலுடன் தடையின்றி ஒன்றிணைந்து சூரிய அஸ்தமனத்திற்கு எதிராக ஒளிரும் தங்க நினைவுச்சின்னம் போல் தோன்றுகிறது.

கோட்டையின் பாரம்பரிய சுவர்கள், 30 அடி உயரத்தை எட்டும், குறுகிய சந்துகள், வீடுகள் மற்றும் வரலாற்று கட்டடங்களின் தளம் பல்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்பட்ட 99 கோட்டைகளையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. அதன் ராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவத்திற்கு அப்பால், ஜெய்சால்மேர் கோட்டை அரசக் குடியிருப்பு மற்றும் நிர்வாக மையம், வீட்டு அரண்மனைகள், அலுவலகங்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளாகவும் செயல்பட்டது.

இத்தகைய பாரம்பரியமிக்க கோட்டையை ஒரு முறை கண்டு களித்து வருவோமா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com