கை தட்டினால் பறந்துபோகும் நோய்கள்!

கை தட்டுதல் பயிற்சி
கை தட்டுதல் பயிற்சி
Published on

கை தட்டுதல் (Clapping) என்பது இரு கைகளை தட்டி எழுப்பும் ஓசையாகும். பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சி போன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்விதமாக கை தட்டப்படுகிறது. பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாகக் கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில், `கிளாப்பிங் தெரபி' என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

‘கை தட்டுங்கள், நோய்களிலிருந்து விடுதலை பெறுங்கள்’ என்கிறார்கள். காலை நேரத்தில் பொழுது புலர்வதற்கு முன்பு கைதட்டல் ஒரு வகை சிகிச்சைதான் என்கிறார்கள். இதனை, ‘கை தட்டல் யோகாசனம்’ என்கிறார்கள். இதனால் இதயநோய், ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, சளி தொந்தரவு, தலைவலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது என்கிறார்கள்.

இரண்டு உள்ளங்கைகளிலும், 30க்கும் மேற்பட்ட அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவை தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன. மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும். மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும். குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்த உதவும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும். வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும், ஞாபக சக்தி கூடும், கவனச்சிதறலும் கட்டுப்படும்.

இதையும் படியுங்கள்:
இரவில் அதிகமா தாகம் எடுக்குதா? போச்சு! 
கை தட்டுதல் பயிற்சி

கை தட்டுதலின் மூலம் இரத்த ஓட்டம் சீராகும், நரம்புகளில் இரத்த நாளங்களில் கொழுப்பு படியாது, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றின் வீரியத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

கை தட்டுதல் பயிற்சியை எப்படி செய்வது? இரு கைகளையும் நேராக இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை சாதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளும், விரல்களின் நுனியும் கை தட்டும்போது ஒன்றுடன் ஒன்று சேரவேண்டும். முதல் நாள் 100 முறையும், அடுத்த நாள் 150 முறையும் அடுத்தடுத்த நாட்களில் இதை அதிகரிக்கலாம். முதலில் ஒரு நிமிடத்தில் 60 முதல் 100 வரை கை தட்ட ஆரம்பித்து அடுத்தடுத்து வேகத்தை கூட்டி தினமும் 20 நிமிடங்கள் வரை இந்த பயிற்சியை செய்ய வேண்டும். உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலை வேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

உளவியல் மற்றும் நடத்தை அறிவியல் இன்டர்நேஷனல் ஜர்னல், கைதட்டலின் மனநல நன்மைகளை உறுதிப்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்னைகள், கழுத்து மற்றும் கீழ் வலி, சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைகள் போன்ற நோய்களும் கைதட்டலின் உதவியுடன் நிவாரணம் பெறலாம் என்று அது அறிவுறுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com