தேர்தலில் வெற்றி, தோல்வி தெரியும்; டெபாசிட் இழப்பு பற்றி தெரியுமா?

Victory and defeat in elections are known; Know about loss of deposit
Victory and defeat in elections are known; Know about loss of deposithttps://www.tribuneindia.com

ந்தியாவில் தேர்தல் திருவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னணிக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சரவெடிக்கு திரி கிள்ளி பற்ற வைத்திருக்கிறார்கள். பரப்புரையாக பட்டி தொட்டியெங்கும் குழாய்கள் ஒலிக்க துவங்கிவிட்டது. அதன்பின் வாக்குப்பதிவு. கடைசியாக தேர்தல் முடிவுகள். யார் வென்றார்கள்? எவ்வளவு வாக்குகள் வித்தியாசம்? தோல்வி. யாருக்கு டெபாசிட் காலி? என்றெல்லாம் விதவிதமான செய்திகளை நாம் கேள்விப்படவிருக்கிறோம். வெற்றி, தோல்வி சரி; புரிகிறது. அதென்ன டெபாசிட் இழப்பு? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

டெபாசிட்: தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் அதற்கான விண்ணப்பம் பெற்று தம்முடைய தகவல்களை குறிப்பிட்டு அதனை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். இதுவே வேட்புமனு தாக்கல் செய்வதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 (1951)ன்படி தேர்தலில் போட்டியிடும் நபர் குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக (டெபாசிட்) கட்டவேண்டும். மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர் 10,000 ரூபாய் டெபாசிட்டாகக் கட்டவேண்டும். இதுவே நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட் கிடைக்குமா?: கட்டிய டெபாசிட் தொகையானது கீழ்க்கண்ட சூழ்நிலையில் வேட்பாளரிடமோ அல்லது அவரைச் சார்ந்தவரிடமோ திரும்ப வழங்கப்படும். தேர்தல் ஆணையம் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் வேட்புமனு அளித்தவரின் பெயர் வராமல் இருந்தால் தேர்தல் ஆணையம் அவருடைய டெபாசிட் தொகையைத் திரும்ப அளித்துவிடும். தேர்தலுக்கு முன்பே வேட்பாளர் மரணமடைந்தாலும் அவர் கட்டிய தொகை திரும்ப வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது!
Victory and defeat in elections are known; Know about loss of deposit

தேர்தல் முடிவில் அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் டெபாசிட் வேட்பாளருக்கு திரும்ப கொடுக்கப்படும். அதாவது, ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 60 என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் 10க்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் பணம் கிடைக்கும். வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசித் தேதிக்குள் வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டால் கட்டிய பணம் நிச்சயம் கிடைக்கும்.

டெபாசிட் காலி: பதிவான மொத்த வாக்குகளில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெறாத வேட்பாளரின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படாது. இதுவே டெபாசிட் இழப்பு எனப்படுகிறது. சரியாக ஆறில் ஒரு பங்கு வாக்கைப் பெற்றிருந்தாலும் டெபாசிட் கிடைக்காது.

இப்படி தேர்தல் ஆணையத்திற்குக் கிடைக்கும் பணமானது அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்தத் தொகை தேர்தல் செலவினங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com