Overthinking is not unhealthy
Overthinking is not unhealthyhttps://www.uyirpu.com

ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது!

வர் திங்கிங் உடம்புக்கு ஆகாது. அதீதமாக சிந்திப்பது பிரச்னைகளை உண்டுபண்ணும். இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில், ‘ரூமினேஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் தனக்கு நடந்ததை பற்றியே திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து அசைபோட்டுக் கொண்டிருப்பது அவர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதுடன் மன அழுத்தம் எனப்படும் டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி முடிந்து போன விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை.

நமக்குப் பிடித்த விஷயங்களை சிந்திக்கும்போது மனம் லேசாகும். ஆனால், நாம் சிந்திப்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயங்களைப் பற்றியேதான். தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை உண்டுபண்ணும்.

சிந்திப்பதற்கும் அதிகமாக யோசிப்பதற்கும் உள்ள வித்தியாசம்: சிந்திப்பது என்பது ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு தீர யோசிப்பது. அதாவது எதனையும் சிந்தித்து செயல்படுவது. அதீதமாக யோசிப்பது என்பது தேவையில்லாத வேலை. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவெடுத்து செய்வதால் அந்த செயல் நாம் நினைத்தபடியே வெற்றிகரமாக முடியும்.  அதுவே ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அதிகம் யோசித்தால் மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் போன்றவை உண்டாகும். இதனால் இரவில் தூக்கம் கெடும். உடல்நிலை கூட பாதிக்கப்படும். அதிகமாக யோசிப்பது என்பது நேரம் காலம் பார்க்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பது. இதனால் தேவையில்லாத குழப்பம்தான் வரும்.

மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில் 12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியம். அவை நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அந்த எண்ணங்கள் (சிந்தனைகள்) நம் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.

எண்ணங்கள் தான் வாழ்க்கையை உருவாக்குகின்றன: எண்ணங்களே வார்த்தைகளாகி, செயல்களாக மாறி நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. எனவே. நாம் சிந்திக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளலாமல் இருக்க பழக வேண்டும்.

உடல் நலமும் மன நலமும் பேண செய்ய வேண்டியது: இதற்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை அல்லது மாலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் நடப்பது நம் மனதை லேசாக்கும்.

இதையும் படியுங்கள்:
சருமம் பளிச்சென்று இருக்க உதவும் உருளைக்கிழங்கு பவுடர்!
Overthinking is not unhealthy

எளிதான உடற்பயிற்சி: உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் எளிதான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்கும்.

தியானம்: அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சை இழுத்து வெளியே விட்டு நம் சுவாசத்தை கவனித்து பழகுதல் சிறந்தது. அத்துடன் நம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் தேவையில்லாத எண்ணங்கள், யோசனைகள் மனதில் தோன்றாது. தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாததால் மனதில் குழப்பமும் உண்டாகாது. மனம் தெளிவாக இருந்தால் எந்த முடிவையும் குழப்பம் இல்லாமல் எடுக்க முடியும்.

மனப்பயிற்சி: மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்போது அதில் இருந்து விடுபட, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது, நண்பர்களுடன் உரையாடுவது, புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது, புது சூழலில் நம்மை இருத்திக் கொள்வது, மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களை கேட்பது என நம் மனதை திசை திருப்ப அதீத யோசனை எனப்படும் ஓவர் திங்கிங்கிலிருந்து வெளிவரலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com