'சன் டூங்': வியட்நாமின் பிரமிப்பூட்டும் அதிசய குகை: பூமிக்கு அடியில் ஒரு புதிய உலகம்!

Son doong cave
Son doong cave
Published on

Journey to the center of the earth என்ற படத்தில் ஒரு ஓட்டை மூலமாக பூமியின் நடுப்பகுதிக்கு ஹீரோவும் அவருடைய நண்பர்களும் சென்று விடுவார்கள். அங்கே போய் பார்த்தால் யாருமே இதுவரை பார்த்திராத ஒரு தனி உலகமே உள்ளேயிருக்கும். இதுப்போலவே நம் உலகில் உண்மையாகவே ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வியட்நாமில் உள்ள son doong cave தான் அது. வியட்நாமின் குவாங் பின்க் மாகாணத்தில், லாவோஸ் அருகில் அமைந்துள்ளது இந்த குகை.

1991 ல் ஒரு விவசாயி காட்டிற்குள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு மலைகளுக்கு நடுவிலே ஒரு குகை இருந்ததை பார்த்தார். அந்த குகையில் இருந்து குளிர் காற்று வீசியிருக்கிறது, உள்ளிருந்து ஆறு ஆடும் சத்தமெல்லாம் கேட்டிருக்கிறது. இவருக்கு அந்த குகையில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று புரிகிறது. ஆனால், குகைக்குள் செல்ல பயம். அதனால் உள்ளே போகாமல் ஊருக்கு வந்துவிடுகிறார்.

அவர் இதைப் பற்றி ஊரில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். அந்த ஊரில் இந்த விஷயம் பேசும்பொருளாக மாறுகிறது. இருப்பினும் அதனுள் சென்று பார்க்க யாருக்குமே தைரியமில்லை. கடைசியாக 2009 ல் பிரிட்டிஷ் explorers அதனுள் சென்று பார்க்கிறார்கள்.

அந்த இடமே மிகவும் வித்தியாசமாக தனி உலகம் போல இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அந்த குகைக்குள்ளேயே தனியாக ஒரு காடு, ஆறு, மேகங்கள் கூட இருந்திருக்கிறது. அங்கிருக்கும் தட்பவெப்பநிலை கூட வித்தியாசமாகவும் செடிகள் கூட புதிதாகவும் இருந்திருக்கிறது. உலகத்தில் வேறு எங்கேயும் இல்லாத செடிகளும், உயிரினங்களும் அதனுள் காணப்பட்டன.

தற்போது அந்த குகை ஒரு சுற்றுலா தலமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து 1000 நபர்களை மட்டும் அதனுள் அனுப்புகிறார்கள். இந்த அதிசயக் குகையைச் சுற்றிப் பார்க்க Oxalis Adventure Tours என்ற நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. இதுவரை உலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகபெரிய குகை இதுதான்.

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் அம்மாவுக்கும் மேலாக அக்கறை காட்டும் அதிசய அப்பா தவளைகள்!
Son doong cave

சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கு அடியில் ஓடிய ஆறால் சுண்ணாம்புப் பாறைகள் அரித்துச் செல்லப்பட்டு இந்தக் குகை உருவானது என்று சொல்லப்படுகிறது.

இயற்கையுடைய அதிசயத்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com