முத்து குளிக்க வாறீகளா? எப்படி?

Muthu Kuliththal
Muthu Kuliththal
Published on

- பி.ஆர்.லெட்சுமி

நல்ல முத்து பற்றி அறிவோமா?

  • நட்சத்திர ஒளி நிறைந்ததும் நல்ல வட்ட வடிவமான அமைப்பு உள்ளதுமே சிறந்த முத்தாகும்.

  • நவரத்தினங்களில் முத்துக்கு தனியிடம் உண்டு.

  • முத்தின் பிறப்பிடம் பல இடங்களாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் நீரில் பிறப்பவை ஜலஜம் என்றும் நிலத்தில் பிறப்பவை ஸ்தளஜம் என்றும் வழங்கப்படுகின்றன.

  • 22 வகை ரத்தினங்களில் ஒன்றுதான் முத்து. அக்னி புராணம் என்ற நூலோ 37 எனக் கூறுகிறது.

  • நவமணிகளில் முதல், இடை, கடை என்ற வகையில் முத்து அடங்கும். பஞ்சரத்தினம் என குறிக்கப்படுபவனவற்றுள் முத்து அடங்கும்.

  • செங்கடலில் கிடைக்கும் வகைகளுக்கு எகிப்திய சிப்பி என்று பெயர்

  • 10 பவுண்டு கனமும் ஓரடி விட்டமும் கொண்ட இவற்றை மிகவும் சிறந்ததாக கூறுவர்.

முத்து தோன்றும் விதம்:

முத்துச்சிப்பிகளின் வலைக்குள், வாய்க்குள் வைகாசி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பெய்யும் மழைத்துளிகள் விழுமானால் அந்தச் சிப்பிகளில் முத்துகள் பிறக்கும்.

முத்து குளிக்கும் விதம்:

கடவுளை வணங்கி தொழிலைத் தொடங்குவர். ஒவ்வொரு படகிலும் ஐந்து பேர் இருப்பார்கள். இருவர் தனித்தனியாக இடுப்பில் கயிறைக் கட்டிக்கொள்வர். தண்ணீரில் அழுந்துவதற்காக பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பர். முத்து சிப்பிகளைப் பொறுக்கி ஒரு பையில் அள்ளிக்கொண்ட பிறகு கயிறை அசைப்பர். கயிறு அசையும்போது படகில் உள்ளவர் கடலுக்குள் இருப்பவரை மேலே இழுப்பர். இதில் உயிர் போகிறவரும் உண்டு.

தற்சமயம் செயற்கை முத்துகளே அதிகம் கிடைக்கின்றன. இயற்கை வளம் சீர்கெட்டதால் முத்துகள் உருவாகும் சூழல் இல்லை.

இதையும் படியுங்கள்:
காலங்களைக் கடந்து நிற்கும் கற்றளி கோயில்கள்!
Muthu Kuliththal

முத்தின் பிறப்பிடம்:

நீர்- சங்கு, சிப்பி மீன் தலை தாமரை இலை.

நிலம்- மேகம், மூங்கில், பாம்பின் தலை, பன்றி கொம்பு, கரும்பு, யானை தந்தம், மகளிரின் கழுத்து, சிங்கத்தின் கை, கொக்கின் கண்டம், கமுகு, தவளை, கோவேறு கழுதை போன்றவை என பலரும் கூறுகின்றனர். இருபது இடங்களில் முத்து பிறப்பதாகவும் கூறுவர்.

முத்துகள் விளையும் இடத்தின் அருகில் உள்ள மணல் திடல்களை முத்துத்திடல் என்று அழைத்து வந்துள்ளனர். திருநெல்வேலி வட்ட கரைக்கு வடக்கு, இலங்கைக் கரைக்கு மேற்கு எல்லைக்கு உட்பட்ட மன்னார் தீவிற்கு தெற்கிலும், இலங்கையின் வட மாகாணத்திற்கு மேற்கிலும் முத்து தொழில் நடைபெற்று வந்துள்ளது.

சூசி கரை என அழைக்கப்படும் தூத்துக்குடி முத்து வெண்மையாக இருப்பதால் விலை அதிகம்.

முத்து அணிவதால் ஏற்படும் நன்மைகள்

  • எல்லா விதமான பாவங்களும் போகும்.

  • ஆயுள் முழுவதும் புகழ் உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com