பண்டைய ரோமானியர்கள் சிறுநீரை இதற்கெல்லாமா பயன்படுத்தினார்கள்?

Romans with Urine
Romans

ஒரு புத்தகத்தில் சிறுநீர் என்று எழுதியிருந்தாலே உதட்டை பிதுக்கிக்கொண்டு புருவத்தை சுழிப்போம். ஆனால், பண்டைய ரோமானியர்கள் சிறுநீரை பல வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது இந்தப் பழக்கம் உலகில் எங்குமே இல்லை என்றாலும், பண்டைய காலத்தில் சிறுநீரை பயன்படுத்தும் முறைகள் நிறையவே இருந்தன. குறிப்பாக, பண்டைய ரோமானியர்கள் விலங்குகளின் சிறுநீரும், மனிதர்களின் சிறுநீரும் பல வகைகளில் நன்மை தருகின்றன என்று நம்பினார்கள். பண்டைய ரோமானியத்தில் சிறுநீர் முக்கிய பங்காற்றியதற்கு காரணம், அதில் தாத்துக்கள் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாஸியம், அமோனியா போன்றவைகள் உள்ளன என்று நம்பப்பட்டது. அந்தவகையில் சிறுநீர் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

தோல் தயாரிப்பு:

பல வருடங்களுக்கு முன்னர் தோல் (Leather) தயாரிப்பிற்கு குதிரைகள் மற்றும் மனிதர்களின் சிறுநீரை பெரியளவில் பயன்படுத்தினார்கள். விலங்குகளின் தோலை சிறுநீரில் நன்றாக ஊறவைப்பதால், அது சீக்கிரமாகவே மென்மையாகிறது. ஆனால், சிறுநீர் வாடை தொழிற்சாலை முழுவதும் வீசும் என்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியிலும், ஊருக்கு வெளியேவும் தான் தொழிற்சாலைகளை நிறுவினார்கள்.

துணி துவைத்தல்:

சிறுநீரில் இருக்கும் யூரியா அமோனியாவாக மாறி துணிகளின் அழுக்குகளைப் போக்க உதவியது. அமோனியா துணியில் இருக்கும் கரை, எண்ணெய் கரை போன்ற அனைத்தையும் சுத்தம் செய்து, பளபளப்பாக மாற்றும். ஆகையால், சிறுநீர் பயன்படுத்தியே அவர்கள் துணிகளை சுத்தம் செய்தார்கள்.

துணியின் சாயம்:

பல நாட்கள் ஊற வைத்த சிறுநீரை வண்ணங்களுடன் கலந்து துணிகளில் பயன்படுத்தினார்கள். இதனால், சீக்கிரத்திலேயே சாயம் போகாமல் இருக்குமாம்.

பல் சுத்தம்:

அனைத்தையும் விட இது கொஞ்சம் விசித்திரமானது என்றே கூற வேண்டும். நாம் எப்படி பல் துலக்கப் பேஸ்ட்டை பயன்படுத்துகிறோமோ, அதேபோல் அவர்கள் அப்போது சிறுநீரைப் பயன்படுத்தினார்கள். விலங்கு மற்றும் மனிதர்களின் சிறுநீரைப் பல் துலக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால், அவர்கள் பற்கள் சுத்தமாகி வெள்ளையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பேஸ்ட் வந்தவுடன் இந்தப் பழக்கம் மாறிபோனது.

காயம்:

அதேபோல், மனித காயங்களுக்கும், விலங்குகளின் காயங்களுக்கும் சிறுநீர் பயன்படுத்தியே குணப்படுத்தினார்கள். இது அவர்களின் காயங்களை சுத்தம் செய்வதோடு, காயத்தை ஆற்றவும் உதவி செய்தது.

இவையனைத்தும் பண்டைய ரோமானியர்களின் பழக்கங்கள்.

இதையும் படியுங்கள்:
சமீபத்தில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள்!
Romans with Urine

19 நூற்றாண்டின் சிறுநீர் பயன்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவின் சிவில் போர் காலத்தில், சிறுநீர் வைத்து கன் பவுடர் கண்டுபிடித்தார்கள். அதாவது சுண்ணாம்பு, சிறுநீர் மற்றும் மரம் பயன்படுத்தி ஒரு கலவை செய்து, அதனை இரண்டு வருடங்கள் காய வைத்திருக்கிறார்கள். Saltpetre என்ற அந்த உலர் கலவையை வெடி குண்டாகவும், கன் பவுடராகவும் பயன்படுத்தினார்கள்.

கடந்த 2012ம் ஆண்டு பள்ளி மாணவிகள் இணைந்து சிறுநீர் பயன்படுத்திய பவர் ஜெனரேட்டரைக் கண்டுபிடித்தார்கள். இதன்மூலம் 1 லிட்டர் சிறுநீர் 6 மணி நேரம் கரண்ட் தருகிறது என்பதை நிரூபித்தார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com