படைப்புகளைக் காக்கும் பதிப்புரிமை

Copyright
Copyright
Updated on

தற்போது பிரபல இசையமைப்பாளர் தனது பாடல்களை பயன்படுத்துவோர் மீது வழக்குத் தொடர காரணமாகும் பதிப்புரிமை பிரச்னைகள் பேசுபோருளாக உள்ளது. எந்த ஒரு படைப்பும் உருவாக்கும் நபருக்கு சொந்தமா அல்லது ஒரு முறை சன்மானம் பெற்றுவிட்டால் அது பொதுவானதா எனும் விவாதங்கள் களைகட்டுகிறது. பதிப்புரிமை என்றால் என்ன? எவையெல்லாம் இதன் கீழ் வரலாம் மற்றும் மீறல் குறித்து இங்கு காண்போம்.

பதிப்புரிமை என்றால் என்ன?

பதிப்புரிமை என்பது இலக்கியம், இசை, கலை மற்றும் மென்பொருள் போன்ற அசல் படைப்புகளைப் பாதுகாக்கும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் ஒரு வடிவமாகும்.

இது அசல் படைப்பை உருவாக்கியவருக்கு படைப்பை மீண்டும் உருவாக்க, விநியோகிக்க மற்றும் காட்சிப்படுத்த தனிப்பட்ட உரிமைகளை வழங்குகிறது. இதன் மூலம் புத்தகங்கள், இசை, திரைப்படங்கள், மென்பொருள் மற்றும் கலைப்படைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகளைப் பாதுகாக்கலாம்.

பதிப்புரிமையால் பாதுகாக்கப்படும் வரிசையில் வருபவை:

எழுத்து வடிவ படைப்புகளான நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் பிற எழுதப்பட்ட படைப்புகள்.

இசை படைப்புகளான இசையமைப்புகள், பாடல் வரிகள் மற்றும் இசை ஏற்பாடுகள் கலைப்படைப்புகளான ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற காட்சிப் படைப்புகள்; மென்பொருளான கணினி நிரல்கள் மற்றும் பயன்பாடுகள்; நாடகப் படைப்புகளான நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் பிற செயல்திறன் சார்ந்த படைப்புகள்.

பதிப்புரிமையின் நன்மைகள்:

படைப்பு முதலீட்டின் பாதுகாவலாகும் பதிப்புரிமை, அசல் படைப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்யப்படும் நேரம், முயற்சி மற்றும் பயன்களைப் பாதுகாக்கிறது. விற்பனை அல்லது ராயல்டிகள் மூலம் தங்கள் படைப்புகளிலிருந்து வருமானம் ஈட்ட அனுமதிக்கிறது. மேலும் சிறந்த படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. ஆம், பிரத்தியேக உரிமைகளை வழங்குவதன் மூலம் படைப்பாளிகளை புதிய மற்றும் அசல் படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவோட தெற்கு முனை கன்னியாகுமரி இல்ல... பின்ன எதுவாம்?
Copyright

மீறல் என்பது இதுதான்:

பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அனுமதியின்றிப் பயன்படுத்துதல், மீண்டும் உருவாக்குதல் அல்லது விநியோகித்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத பயன்பாடு பதிப்புரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பதிப்புரிமை மீறல் சட்ட நடவடிக்கை, அபராதம் போன்ற பாதகங்களுக்கு வழிவகுக்கும்.

நியாயமான பயன்பாடு மற்றும் விதிவிலக்குகள் என்றால் என்ன?

அசல் படைப்பு மீதான விமர்சனம், வர்ணனை அல்லது கல்வி போன்றவற்றிற்காக அனுமதியின்றி பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் வரையறுக்கப்பட்ட பயன்பாடு நியாயமான பயன்பாடு ஆகிறது. இத்துடன் நூலகங்கள், காப்பகங்கள் அல்லது அணுகலில் இயலாமை போன்றவைகள் பதிப்புரிமைச் சட்டத்திற்கு குறிப்பிட்ட விதிவிலக்குகள் ஆகும்.

பதிப்புரிமைகளைப் பதிவு செய்தல் குறித்து:

நமது படைப்பைப் பதிப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்வது, பதிவு உரிமைகளை அமல்படுத்துவதை எளிதாக்குவது உள்ளிட்ட கூடுதல் நன்மைகளை வழங்கக்கூடும்.

பதிப்புரிமைச் சட்டம் நாட்டிற்கு நாடு மாறுபடும் என்பதால் நமது அதிகார வரம்பில் உள்ள குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம். பதிப்புரிமை குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தகுதிவாய்ந்த வழக்கறிஞர் அல்லது ஆலோசகரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
பிரியாணி நகரம் எது தெரியுமா?
Copyright
logo
Kalki Online
kalkionline.com