சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?

What is the difference between red trains and blue trains?
What is the difference between red trains and blue trains?
Published on

ந்தியாவில் ரயில் பயண சேவை தொடங்கப்பட்டு 170  வருடங்களைத் தாண்டியும் கூட இன்றளவும் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இது உள்ளது. சொகுசு கார்களை விட நீண்ட தூர பயணத்திற்கு சிறந்ததாக ரயில் பயணத்தை பலரும் கருதுகின்றனர். நீண்ட தூரம் அசதி இல்லாமல் பயணம் செய்வதற்கு ரயிலை விட ஏற்றது வேறு எதுவும் இல்லை. ரயிலின் சிறப்பு வகுப்புகள் மிகவும் சொகுசாகவும் பயணக் களைப்பு இல்லாமலும் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.

நாம் ரயில் நிலையங்களில் நீல நிறத்தில் சில ரயில்களையும் சிவப்பு நிறத்தில் சில ரயில்களையும் பார்த்திருப்போம். பெரும்பாலானவர்கள் இந்த வண்ணங்கள் ரயிலின் அழகுக்காகவும், தோற்றத்திற்காகவும் இந்நிறம் பூசப்பட்டுள்ளதாக நினைத்திருப்பார்கள். இந்த வண்ணங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ரயில் உருவாக்கத்தில் தனி வரலாறு உண்டு. அதேபோல், ரயில் பெட்டிகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு நிறப் பெட்டிகள் ICF: சிவப்பு மற்றும் நீல வண்ண ரயில் பெட்டிகள் தயாரிக்கும் இடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. நீல நிறத்தில் இருக்கும் ரயில் பெட்டிகள் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதைத் தெரிந்துகொள்ள 5 நிமிடம் போதுமே!
What is the difference between red trains and blue trains?

1952ல் நாட்டிற்கு விடுதலை கிடைத்த பின்னர் இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்பட்டது. அதன்பிறகு, இங்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நீல நிறப் பெட்டிகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டவை. இந்த ரயில் பெட்டிகளில் ஏர் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகளின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட சராசரி வேகம் மணிக்கு 110 கி.மீ. மட்டுமே.

நீல நிறப் பெட்டிகளில் படுக்கை வகுப்பில் 72 இருக்கைகளும் குளிர்சாதன 3ம் வகுப்பில் 64 இருக்கைகளும் உள்ளவாறு தயாரிக்கப்பட்டது. இந்தப் பெட்டிகளில் உள்ள பொருட்களை 18 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, இந்தப் பெட்டியின் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது. இந்தப் பெட்டிகள் டூயல் பஃபர் சிஸ்டம் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதால், விபத்து ஏற்படும்போது,​​ பெட்டிகளில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக விபத்தின் இழப்புகள் அதிகமாக இருக்கும்.

சிவப்பு நிற ரயில் பெட்டி (லிங்க் ஹாஃப்மேன் புஷ் LHB): சிவப்பு நிற ரயில் பெட்டி தொழில்நுட்பம் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலாவில் சிவப்பு நிற ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த வகைப் பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகுவால் உருவாக்கப்படுகின்றன. மேலும். டிஸ்க் பிரேக்குகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வீட்டின் பூஜையறையில் கட்டாயம் செய்யக்கூடாத 8 தவறுகள்!
What is the difference between red trains and blue trains?

சிவப்பு நிறப் பெட்டிகளை 24 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும். இதனால் நீல நிறப் பெட்டிகளை விட, இவற்றின் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது. இந்தப் பெட்டிகளின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆகும். இந்தப் பெட்டியின் படுக்கை வகுப்பில் 80 இருக்கைகளும், குளிர்சாதன 3ம் வகுப்பில் 72 இருக்கைகள் உள்ளன. பராமரிப்பு செலவும் குறைவு, பாதுகாப்பும் அதிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com