டிரெண்டாகி வரும் 'Fake wedding'! அப்படி என்ன தான் இருக்கு இந்த கல்யாணத்தில்?

Fake wedding trend
Fake wedding trend
Published on

தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு திருமணம் என்றாலே பிடிக்காத விஷயமாக மாறிவிட்டது. ஏனெனில், குடும்ப பாரம், பொறுப்புகள் போன்றவற்றை சுமக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பிறகே திருமணம் என்று நிறைய இளைஞர்கள் வைத்திருக்கும் குறிக்கோளும் ஒரு காரணமாகும்.

எப்போதும் சுதந்திர பறவையாக சுற்ற வேண்டும் என்பது தற்போது உள்ள பெரும்பாலான இளைஞர்களின் மனநிலையாக உள்ளது. இருப்பினும் திருமணக் கொண்டாட்டம், திருமணத்தில் பரிமாறும் உணவுகள், ஆட்டம் பாட்டம் யாருக்கு தான் பிடிக்காது? இந்த ஆசைகளை நிறைவேற்ற தான் Fake Wedding உள்ளது.

இந்த Fake Wedding இந்தியாவில் இளைய தலைமுறைகள் மத்தியில் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இதில் பாரம்பரிய முறைப்படி திருமணக் கொண்டாட்டம், சங்கீத், உணவுகள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இருக்கும். ஆனால், திருமணத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மணப்பெண் மற்றும் மணமகன் மட்டும் இருக்க மாட்டார்கள்.

திருமணத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சிகளான Haldi, mehndi, sangeet போன்ற அனைத்தும் இதிலேயும் இருக்கும். இதுப்போன்ற Fake Weddingல் மகிழ்ச்சியாக மற்றும் சந்தோஷமாக இருக்க யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். இதில் கலந்துக் கொள்ள குறிப்பிட அளவு தொகை செலுத்த வேண்டும்.

குடும்ப பாரம், திருமண பந்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் பாரம்பரிய திருமணத்தில் நிகழும் அழகியல் மற்றும் பாரம்பரியமாக நடத்தப்படும் கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ விரும்பும் இளம் சமுதாயத்தினரால் இதுப்போன்ற டிரெண்ட்கள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய Fake Wedding நிறைய தொழில்கள் வளர்ச்சியடைவதற்கும் உதவுகிறது. Event planners, decorators, venue, DJ போன்ற திருமணம் சம்மந்தமான தொழில்களை சார்ந்தோருக்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் எந்த ஒரு அழுத்தமும் இன்றி இளைய சமுதாயத்தினர் புரிந்துக் கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உலக புகழ் பெற்ற 'மோனலிசா' ஓவியத்தின் பின்னால்... 13 வருட கதை!
Fake wedding trend

இந்த Fake Wedding கொண்டாட்டத்தை குறிப்பிட்ட சிலர் தான் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் கிடையாது. சில கல்லூரிகள் கூட இதை கலாச்சார நிகழ்சிகளாக கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இதுப்போன்ற நிகழ்வில் கலந்துக்கொள்வீர்களா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com